Re-release movies: பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது ஏன்? – விளக்கம் கொடுத்த கமலா தியேட்டர்

மிழ் சினிமாவில் வாரம்தோறும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. பெரிய ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்களின் வருகையும் அதிகரித்து வந்தாலும் எதிர்பார்த்த அளவு அவை பெரிய அளவில் வரவேற்பை பெற தவறி விடுகிறது.

 

ஸ்டார் நடிகர்களின் பேஸ் வேல்யூவிற்காக ஓரளவுக்கு வரவேற்பையும் வசூலையும் பெற்றாலும் திரைக்கதை அளவில் மிகவும் சுமாராகவே இருக்கின்றன. அதனால் அவை ரசிகர்களின் மனதில் நிலைக்காமல் போய்விடுகின்றன.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களை திரையரங்கில் மறுபடியும் ரீ ரிலீஸ் செய்து வெளியிடுவது தான் தற்போதைய ட்ரெண்ட்.

அப்படி ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைதுள்ளது. இது குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சென்னையில் மிகவும் பிரபலமான திரையரங்கமான கமலா திரையரங்கத்தின் திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல் பதில் அளித்துள்ளார்.

 

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் ‘3’ படத்தை ஒரு ஷோ மட்டும் போட்டோம். அந்த சமயத்துல நிறைய ஆடியன்ஸ் டிக்கெட் கிடைக்காம திரும்பி போனாங்க.

அப்ப தான் எங்களுக்கு ஒரு ஐடியா வந்தது. இது போல ஹிட் அடித்த பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்தால் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வரும் என தோணுச்சு.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *