மகாவிஷ்ணுவிற்கு பிடித்த ராசிகள் இவர்கள்: பணத்துக்கு நோ பஞ்சம், ஏழ்மைக்கு நோ எண்ட்ரி!!

Favourite Zodiac Signs of Lord Vishnu: நாராயணன், ஹரி, திருமால் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படும் மகாவிஷ்ணு மும்மூர்த்திகளில் ஒருவர். அவர் காக்கும் தொழிலை செய்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்து சமயத்தின் மிக முக்கியமான கடவுள்களில் ஒருவரான மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்து பல்வேறு யுகங்களில் மனிதர்களை காப்பாற்றியுள்ளார். எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்கி தர்மத்திற்கு தீங்கு விளைகிறதோ அப்போதெல்லாம் அவர் அவதரிக்கிறார்

விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். தசாவதாரம் எடுத்து உலகை காத்த தயாபரன் அவர். குறிப்பாக அவருடைய இராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் மனிதர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான பலவித பாடங்களை புகட்டுகின்றன. படைத்தல், காத்தல் அழித்தல் என்ற மூன்று தொழில்களில் காக்கும் தொழிலை செய்யும் மகாவிஷ்ணு உலகில் பிறந்துள்ள அனைத்து ஜீவராசிகளையும் காத்து ரட்சிக்கிறார்.

மகாவிஷ்ணுவிற்கு பிடித்த ராசிகள்

மகாவிஷ்ணுவிற்கு (Mahavishnu) முன்னால் அனைவரும் சமமே!! எனினும், ஜோதிட கணக்கீடுகளின் படி சில ராசிகள் அவருக்கு மிகவும் பிடித்தமான ராசிகளாக இருக்கின்றன. இவர்கள் மீது அவர் அதிகப்படியான கருணையோடு இருக்கிறார். அனைத்து வித பிரச்சனைகளில் இருந்தும் இவர்களை அவர் உடனடியாக காக்கிறார். மகாவிஷ்ணுக்கு பிரியமாக இருப்பதால் இவர்கள் லட்சுமி அன்னைக்கும் பிரியமானவர்கள் ஆகிறார்கள். இதனால் அவர்களுடைய வாழ்வில் எப்போதும் பண பற்றாக்குறை இருப்பதில்லை. அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodaic Signs) பற்றி இங்கு காணலாம்.

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பரிபூரண அருள் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். இவர்கள் செய்யும் பணிகளில் எல்லாம் அதிகப்படியான வெற்றியைக் காண்பார்கள். மற்ற ராசிக்காரர்களை ஒப்பிடும்போது இவர்களுக்கு சிறு முயற்சியிலேயே பெரிய வெற்றிகள் கைகூடும். இவர்கள் வாழ்க்கையில் நிதி நெருக்கடி இருக்காது. மகாவிஷ்ணுவின் அருளால் இவர்கள் எப்போதும் தாங்கள் இருக்கும் இடத்தில் முன்னிலையில் இருப்பார்கள்.

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மகாவிஷ்ணுவின் அருள் இருக்கும். அவர்கள் தங்கள் இலக்கை அடைய அவர் எப்போதும் உடன் இருந்து துணை புரிவார். எந்த விதமான சூழ்நிலையிலும் இவர்களது வாழ்க்கையில் பெரிய நிதி நெருக்கடிகள் ஏற்படாது. கடக ராசிக்காரர்கள் மகாலட்சுமியின் அருளால் கடன்களை உடனடியாக திருப்பி செலுத்தி விடுவார்கள்.

சிம்மம் (Leo)

மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரம் நரசிம்ம அவதாரம். ஹிரண்யகசிபுவை வதம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் அருள் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்போதும் உண்டு. மகாவிஷ்ணு மற்றும் அன்னை லட்சுமி அருளால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தனித்துவமான கவனம் கிடைக்கும். பல்வேறு ஆதாரங்களில் இருந்து இவர்களுக்கு பணவரவு இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக சிம்ம ராசிக்காரர்களுக்கு சொத்து சேரும், உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிப்பார்கள். மகாலட்சுமி (Goddess Mahalakshmi) அருளால் இவர்கள் மற்றவர்களை ஈர்க்கக்கூடிய ஆளுமை கொண்டவர்களாகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *