நிம்மதியாக ஓய்வூதியம் பெற வேண்டுமா? அப்போ ‘இந்த’ திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்..
பலர், வேலை செய்யும் நாட்கள் முடிந்து ஓய்வு பெறும் நாட்களில் சரியாக ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பர். அதில் சிலர், சிறிய அளவில் மட்டுமே முதலீடு செய்யும் நோக்கத்துடன் இருப்பர். அப்படி, குறைந்த அளவு முதலீட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் பென்ஷன் சார்ந்த திட்டங்களிலும் பணத்தை முதலீடு செய்வது, சிறப்பான தேர்வாக இருக்கும்.
ஓய்வூதிய மியூசுவல் ஃபண்ட்ஸ் என்றால் என்ன?
ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு இந்த நிதிகள் வழக்கமான நிதி ஆதாரத்தை வழங்குகின்றன. ஒரு ஓய்வு பெற்றவர் அவர் இறக்கும் வரை அவர்களின் முதலீட்டில் வருடாந்திரம் இந்த ஓய்வூதியத்தை பெறுகிறார். ஓய்வூதிய நிதிகள் முதலீட்டாளர்களின் சார்பாக முதலீடு செய்யப்படுபவையாக இருக்கின்றன. மேலும் அந்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம், நிதிகளின் தொகுப்பில் வழங்கப்படும் வட்டியாக பங்களிக்கப்படுகிறது.
பென்ஷன் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்கள், ஐந்து வருட லாக்-இன் காலத்தைக் கொண்டிருக்கின்றன. இவை, முதலீட்டாளர்கள் பயனுள்ள ஓய்வூதியத் திட்டத்திற்காக நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய உதவுகிறது. இதில் முதலீடு செய்வதால் இவை நீண்ட கால சொத்தாக முதலீட்டாளருக்கு உருவாகுகிறது. நிதியற்ற காலங்களில், பண வீக்க காலங்களில் இந்த பென்ஷன் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் வரும் வருமானம் உதவியாக இருக்கும். இது, பெரிய பென்ஷன் தொகையையும் முதலீட்டாளருக்கு பெற்றுத்தரும்.
அதிக லாபத்தை கொடுக்கும் ஓய்வூதிய திட்டங்களின் பட்டியல்:
HDFC ஓய்வூதிய சேமிப்பு நிதி-ஈக்விட்டி திட்டம்:
இது குறித்து கூகுளில் விமர்சனம் தெரிவித்துள்ள பலர், இதற்கு 5ற்கு 4.3 ஸ்டார் ரேட்டிங் அளித்துள்ளனர். இதிலிருந்து வரும் பென்ஷன் தனக்கு போதுமானதாக உள்ளதாக இதிலிருந்து பயன்பெற்ற்வர்கள் தெரிவித்துள்ளனர்.
>UTI ஓய்வூதிய நிதி:
இது ஒரு தனிநபருக்கு அவர்களின் ஓய்வுக் கட்டத்தில் வழக்கமான வருமானத்தை வழங்குகிறது. இந்த நிதியானது 5 ஆண்டுகள் அல்லது ஓய்வு பெறும் வயது வரை இந்த நிதித்தொகையானது பூட்டப்பட்டிருக்கும்.
>நிப்பான் இந்தியா ஓய்வூதிய நிதி:
நிப்பான் இந்தியா ரிடையர்மென்ட் ஃபண்ட் – வெல்த் கிரியேஷன் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, அதன் சொத்துக்களில் குறைந்தது 65 சதவீதத்தை எல்லா நேரங்களிலும் ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்திருக்க வேண்டும். இது 5 ஆண்டுகள் அல்லது முதலீட்டாளர் ஓய்வுபெறும் வயதை அடையும் வரை லாக்-இன் திட்டத்தை கொண்டுள்ளது.
>SBI ஓய்வூதிய பலன் நிதி:
இதில், முதலீட்டாளர் அல்லது அவருக்காக அவரது குடும்பத்தினர் ஆகியோர் முதலீடு செய்யலாம். இது, இந்தியாவில் பலர் முதலீடு செய்யும் பென்ஷன் திட்டங்களுள் ஒன்றாகும்.
>ICICI ப்ரொடென்ஷியல் ரிட்டயர்மெண்ட் ஃபண்ட்:
இந்த திட்டத்தில் 5 வருடங்கள் அல்லது முதலீட்டாளர் ஓய்வு பெறும் காலம் வரை லாக்-இன் காலம் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்றும், இது பாதுகாப்பானதுதான் என்றும் இதன் மூலம் பயன்பெற்றவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
>டாடா ரிட்டையர்மெண்ட் ஃபண்ட்:
முதலீட்டாளர்கள், அவர்களின் ஓய்வூதிய திட்டமிடல் இலக்குகளை அடிப்படையாக கொண்டு நீண்ட கால நிதி பாதுகாப்பிற்கான நிதி திட்டமிடல் கருவியை வழங்க இந்த திட்டம் உதவுகிறது.