இரவில் தூங்கும் முன்பு 2 ஏலக்காய்.. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் பலன் கிடைக்கும்
மசாலா பொருட்களின் ராணி என அழைக்கப்படும் பொருள் தான் ஏலக்காய். இந்த நறுமண பொருளான ஏலக்காய், பிரியாணி போன்ற உணவுகளில் போடப்படுகிறது. அதேபோல் தேநீர் தயாரிக்கும் போதும் அதன் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்த இந்த ஏலக்காய் போடப்படுகிறது. பொதுவாக இந்தியர்கள் ஏலக்காயை கிரேவி, தேநீர், பிரியாணி, புலாவ் போன்ற உணவுப் பொருட்களில் கலந்து பயன்படுத்துகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்தியர்களின் சமையலறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியில் ஏலக்காய் கட்டாயம் இடம்பெற்று இருக்கும். ஏனெனில் அதில் இருக்கும் தனித்துவமான நறுமணமும், மருத்துவ குணங்களும் ஏகப்பட்டது. அதேபோல் ஏலக்காய் என்பது வெறும் மணம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படும் மசாலா பொருள் கிடையாது. இவற்றில் இயற்கையான கூறுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பாதால், ஏலக்காய் கொடிய நோய்கள் ஏற்படமால் தடுக்க உதவுகின்றன.
ஏலக்காயில் மறைந்திருக்கும் ஆரோக்கிய பண்புகள்:
செரிமானத்தை மேம்படுத்த உதவும்: ஏலக்காயில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதனால் இவை செரிமான பிரச்சனைகளை தீர்க்க உதவுவதுடன், மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளையும் தடுக்க உதவும்.
ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்: ஏலக்காயில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், டையூரிடிக் குணங்கள் உயர் ரத்த அழுத்தத்தை சமம் செய்ய உதவும். அதுமட்டுமின்றி இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றத்தை போக்க உதவும்: ஏலக்காய் வாய் துர்நாற்றத்தை போக்க பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாயில் பூண்டு அல்லது வெங்காயம் போன்ற தூற்றத்தை போக்க ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். ஏலாக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை அகற்ற உதவும்.
மனச்சோர்வி நீக்க உதவும்: ஏலக்காயில் நிறைந்துள்ள மணம் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நன்மையை தருவதாக ஆரச்சிகளில் கூறப்பட்டுள்ளது.
உடல் எடையை குறைக்க உதவும்: உடலில் உள்ள கொழுப்பை விரைவாக குறைக்க ஏலக்காய் சாப்பிடலாம். ஏனெனில் இவை அதிக கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்.
தூங்கும் முன்பு ஏலக்காய் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பாலில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அத்துடன் ஏலக்காய் சேர்த்து, இரவில் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கக்கூடும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
ஏலக்காய் பால் தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும். மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கநிலைக்கு செல்ல உதவி புரிகிறது. இதனால், தூங்கி எழுந்திருக்கும் போது சோர்வு ஒருபோதும் இருக்காது
ஏலக்காய் பால் குடிப்பது மூலம் மன அழுத்தம் நீங்கி மன ஆரோக்கியம் மேம்படக்கூடும். செரோடோனின் ஹார்மோன் வெளியிட்டால் மனதில் மகிழ்ச்சி அதிகரித்து, இரவில் நிம்மதியான தூக்கத்தை தரக்கூடும்
முதலில் 2 அல்லது 3 ஏலக்காயுடன் ஒரு கிளாஸ் பாலை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பின் அவற்றை வடிகட்டி, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அருந்தலாம். ஏலக்காய் பாலின் முழுமையான பலனை பெற, தூங்கும் முன்பு தவறாமல் குடிக்க வேண்டும்.