முடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்போ இந்த மூலிகை விதை பயன்படுத்துங்க

முடி வளர்ச்சிக்கு வெந்தய விதை ஹேர் மாஸ்க்: நம் சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களில் ஒன்று தான் வெந்தய விதை. இதில் இருக்கும் நன்மைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியம் முதல் கூந்தல் ஆரோக்கியம் வரை பயன் அளிக்கிறது. அந்த வகையில் தற்போது முடி உதிர்தல் என்பது எல்லா வயதினரையும், எல்லா பாலினத்தவரையும் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாகவே உள்ளது. அதன்படி முடி உதிர்வுக்கு சிறந்த இயற்கை தீர்வாக பயன்படுத்தப்படுகிறது வெந்தயம். வெந்தய விதைகளில் புரதங்கள் மற்றும் நிகோடினிக் அமிலம் மயிர்க்கால்களை திறம்பட பலப்படுத்துகிறது. ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டுகிறது. அதுமட்டுமின்றி வெந்தய விதைகளில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, சி மற்றும் கே, பொட்டாசியம், இரும்பு, பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், இவை முடி உதிர்வைத் தடுத்து, கூந்தலை வலுப்படுத்த உதவும். எனவே வெந்தயத்தை (Fenugreek Seeds) எந்தெந்த வழிகளில் தலைமுடியில் தடவலாம் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

கூந்தலில் வெந்தய விதையை எவ்வாறு பயன்படுத்துவது | How To Apply Fenugreek Seeds On Hair:
வானிலை மாற தொடங்கிவிட்டாலே கை கால்களின் வரட்சி முதல் துவங்கி கூந்தல் வரட்சி முடி உதிர்தல், உடைதல் போன்ற பல பிரச்சனைகள் வரும். இதுபோன்ற கூந்தல் பிரச்சனைகளில் நீங்கள் அவதி பட்டால் கவலை வேண்டாம். வெந்தயத்தில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவது மட்டுமல்லாமல் தலையில் உள்ள பொடுகை நீக்கி அதன்பின் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இத்தகைய பொக்கிஷ தானியத்தை கூந்தலில் பல வழிகளில் தடவுவலாம்.

மெலிந்த கூந்தலுக்கு வெந்தயம்: மெல்லிய கூந்தலை சரிசெய்ய வெந்தய விதையை தினமும் பயன்படுத்தலாம். இதற்கு 2 ஸ்பூன் வெந்தய விதையில் அரை கப் தேங்காய் எண்ணெயில் (Coconut Oil) சேர்த்து சூடாக்கவும். இந்த எண்ணெயை தொடர்ந்து கூந்தலில் தடவி வந்தால் முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் வளரும்.

முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயம்: உங்களுக்கு அதிகப்படியான கூந்தல் உதர்வு பிரச்சனை இருந்தால் 2 ஸ்பூன் வெந்தய விதையை இரவு தண்ணீரில் ஊற வைக்கவும், காலையில் இதனை பேஸ்ட் வடிவில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த பேஸ்ட்டை கூந்தலில் தடவி அரை மணி நேரம் கழித்து கூந்தலை வெதுவெதுப்பான நீரில் அலசவும். இதை நீங்கள் வாரத்தில் 2 முறை பயன்படுத்தலாம்.

வறண்ட கூந்தலுக்கு வெந்தயம்: வெந்தய விதையின் ஹேர் மாஸ்க் (Fenugreek Seeds For Hair) வறண்ட கூந்தலை (Dry Hair) மென்மையாக்க உதவும். இதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் தயிர் எடுத்துக்கொள்ளவும், அதில் வெந்தய பொடி, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த ஹேர் மாஸ்க்கை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து கூந்தலை வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

பொடுகு தொல்லைக்கு வெந்தயம்: பொடுகு தொல்லையில் இருந்து ஒரேடியாக தீர்வு பெற வெந்தயத்தில் எலுமிச்சை சாறு ஊற்றி அதை மிக்ஸியில் அரைத்து, 20 முதல் 25 நிமிடங்கள் கூந்தலில் தடவி கழுவினால், பொடுகு நீங்குகிறது, முடியின் வறட்சி நீங்குகிறது மற்றும் மயிர்க்கால்கள் மேம்படுவது மட்டுமல்லாமல் முடி நீளம் வேகமாக அதிகரிக்க உதவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *