Sevvai 2024: புத்தாண்டில் யோகம் தரும் செவ்வாய்.. அதிர்ஷ்டக்கார ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான் இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவர் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணம் செய்து வந்தார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார்.
செவ்வாய் பகவான் டிசம்பர் 27ஆம் தேதி அன்று குரு பகவானின் தனுசு ராசிக்குள் நுழைந்தார். இவர் தைரியம், வீரம், வலிமை, விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வரும் 2024 ஆண்டு தொடக்கத்தில் சில ராசிகளுக்கு செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். அதனால் உங்களுக்கு முழுமையான அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. தொழில் மற்றும் வியாபார லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். கண்மூடித்தனமாக மற்றவர்களை நம்புவதை தவிர்க்க வேண்டும்.
துலாம் ராசி
செவ்வாய் பகவானால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. உங்கள் அரசியல் 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் பயிற்சிக்கு பின் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.