Thug Life: ஆசைக்காட்டி மோசம் பண்ணிட்டாரே கமல்.. தக் லைஃப் படத்துல அந்த ஹீரோ கேமியோவா?
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு பல ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூலும் இரண்டாம் பாகம் 350 கோடி வசனம் அள்ளியது. ஒட்டுமொத்தமாக அந்த படத்தின் பட்ஜெட் வெறும் 250 கோடி ரூபாய் தான் எனக் கூறுகின்றனர்.
விஜய், அஜித் மற்றும் ரஜினி போன்ற 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யாரும் அந்த படத்தில் நடிக்கவில்லை. படத்திற்கான பட்ஜெட்டை குறைவாக செலவு செய்து வெறும் 150 நாட்களில் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்திருக்கிறார் மணிரத்னம். அவர் செய்த சாமர்த்தியத்தால் கடைசியாக லைக்கா நிறுவனம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. லாபத்தையும் அள்ளியது.
பொன்னியின் செல்வன்: மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் டைட்டில் ரோலில் நடிகர் ஜெயம்ரவி நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி வரும் மணிரத்னம் மீண்டும் ஜெயம் ரவியை இணைத்துக் கொண்டார்.
குந்தவை முதல் பூங்குழலி வரை: பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த திரிஷா, அருள்மொழிவர்மன் ஆக நடித்த ஜெயம் ரவி, ஓகே கண்மணி படத்தில் நடித்த துல்கர் சல்மான் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் கமல்ஹாசனுடன் இணைந்து தக்லீத் படத்தில் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மணிரத்தினம் பட்டறையில் இல்லாத நடிகர் என்றால் மலையாளத்திலிருந்து வந்துள்ள ஜூஜு ஜார்ஜ் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறார்.
கேமியோ ரோல்தான்: பொன்னியின் செல்வன் படத்தில் லீட் ரோலில் நடித்த ஜெயம் ரவி தக் லைஃப் படத்தில் வெறும் கேமியோ ரோலில் மட்டுமே நடிக்க உள்ளார் என்கிற லேட்டஸ்ட் அப்டேட் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் சில நாட்கள் மட்டுமே ஜெயம் ரவி நடித்துவிட்டு, அடுத்ததாக மீண்டும் தனது மாமியார் தயாரிப்பில் அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் எனக் கூறுகின்றனர். அந்தப் படத்தை முடித்துவிட்டு தனது அண்ணன் மோகன் ராஜாவுடன் இணைந்து தனி ஒருவன் 2 படத்திலும் ஜெயம் ரவி நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சைரன் சத்தமா ஒலிக்கவில்லை: ஜெயம் ரவி ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான சைரன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரைப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும், பெரிதாக வசூல் ஈட்ட முடியாமல் தவித்து வருகிறது. ஆனாலும், அடுத்தும் ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் ஜீனி மற்றும் சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ். எம் இயக்கத்தில் பிரியங்கா மோகன் உடன் இணைந்து நடித்து வரும் பிரதர் திரைப்படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.