சுட்டெரிக்கும் சூட்டிற்கு ஏசி வாங்கணுமா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

கோடை காலத்தில் வெயில் கடுமையாக இருக்கும். ஜூலை முதல் அக்டோபர் வரை மழை குறைவாகவும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகுதியாகவும் மழை பெய்யும்.

எப்போதும் பிப்ரவரி மாதங்களில் குளிர் காலமாகத்தான் காணப்படும். ஆனால் தற்போது இந்த பிப்ரவரி மாதத்திலேயே வெயில் மனிதனை வாட்டி வதைத்தெடுக்கிறது.

இந்த வெயில் சூட்டிலிருந்து தப்பிக்க சிலர் ஏசி வாங்குவார்கள் அப்படி ஏசி வாங்கும்போது நீங்கள் எதுவும் தெரியாமல் வாங்க முடியாது.

நீங்கள் ஏசி வாங்கும்போது எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடைக்காலம்
ஏசியின் விலை பொதுவாக 30000லிருந்து தொடங்குகிறது. ஏசியில் ஒரு டன் ஏசி, ஒன்றரை டன் ஏசி, 2 டன் ஏசி மற்றும் 2 ஸ்டார், 5 ஸ்டார் பவர் ரேட்டிங் என பல வித வேரியன்டுகளை கொண்ட ஏசிக்கள் அதற்கேற்ற விலையில் விற்பனைக்கு இருக்கின்றன.

அந்த வகையில் நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் நாம் ஏசியை தெரிவு செய்து வாங்க வேண்டும். ஏசியை கொள்வனவு செய்யும் போது நேரடியாக பணம் செலுத்த முடியவில்லை என்றால் யூபிஐ போன்ற பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை செலுத்தலாம்.

ஏசி வாங்கும் போது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது உங்கள் அறைக்கு ஏற்ற வகையில் நீங்கள் ஏசியை வாங்க வேண்டும்.

100 சதுர அடி கொண்ட ஒரு அறைக்கு 1 டன் ஏசியும், 150 சதுர அடி கொண்ட அறைக்கு ஒன்றரை 200 சதுர அடி கொண்ட அறைக்கு 2 டன் ஏசியையும் வாங்க வேண்டும்.

ஏசியில் இரண்டு வகை உள்ளது. ஸ்பிலிட் ஏசி மற்றும் விண்டோ ஏசி இதில் விண்டொ ஏசி ஜன்னல் பக்கத்தில் மட்டுமே வைக்க முடியும்.

இதற்கு காரணம் அதிலிருந்து அதிகமான ஒலி உண்டாவதால் தான் இதை ஜன்னல் பக்கத்தில் வைக்க வேண்டும். ஸ்பிலிட் ஏசியை உங்கள் வசதிக்கு தகுந்தபடி எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

அதிக பவர் ரேட்டிங் உள்ள ஏசியை வாங்க வேண்டும். இதன் மூலம் நாம் நம்முடைய மின்சாரத்தை சேமிக்கலாம்.

நீங்கள் ஏசியை வாங்கும்போது அதனை சர்வீஸ் செய்யும் சேவையை நிறுவனத்திடமிருந்து எந்த அளவில் கிடைக்கின்றது என்பது குறித்து கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஏசி வாங்கும் போது இந்த விஷயங்களை கவனித்த வாங்கினால் நல்லது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *