Paneer Kalimirch : பன்னீர் காலி மிர்ச்! சூப்பர் சுவையான சைட் டிஷ் ரெசிபி!

தேவையான பொருட்கள்

பன்னீரை ஊறவைக்க

பன்னர் – 400 கிராம்

தயிர் – ஒரு கப்

ஃபிரெஷ் கிரீம் – கால் கப்

சோள மாவு – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகு தூள் – ஒரு ஸ்பூன்

கசூரி மேத்தி – 2 ஸ்பூன்

மசாலா விழுது அரைக்க

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

பட்டை – 2

கிராம்பு – 2

ஏலக்காய் – 2

பச்சை மிளகாய் – 4 நறுக்கியது

வெங்காயம் – 2 நறுக்கியது

பூண்டு – 10 பல்

இஞ்சி – ஒரு துண்டு நறுக்கியது

முந்திரி பருப்பு – அரை கப் ஊறவைத்தது

பன்னீர் காலிமிர்ச் செய்ய

எண்ணெய் – 3 ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்

மிளகு தூள் – அரை ஸ்பூன்

அரைத்த மசாலா விழுது

வறுத்த பன்னீர்

நறுக்கிய கொத்தமல்லி இலை

செய்முறை –

பாத்திரத்தில் தயிர், ஃப்ரெஷ் கிரீம், சோளமாவு, உப்பு, மிளகு தூள், கசூரி மேத்தி சேர்த்து கலந்து விடவேண்டும்.

பின் பெரிதாக நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்க வேண்டும்.

பின் நறுக்கிய வெங்கயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, ஊறவைத்த முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும். உப்பு சேர்த்து கலந்து ஆறவிடவேண்டும்.

மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த பன்னீர் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டு புறமும் பொன்னிறமாக வரும் வரை மிதமான தீயில் வைத்து வறுக்கவேண்டும்.

கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலந்து விடவேண்டும்.

சிறிதளவு தண்ணிர் சேர்த்து கலந்துவிட்டு, உப்பு, ஏலக்காய் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவேண்டும்.

பின்பு கடாயை மூடி 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவேண்டும்.

பிறகு வறுத்த பன்னீரை சேர்த்து கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் கடாயை மூடி வேகவிடவேண்டும்.

கடைசியாக மிளகு தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவேண்டும். பன்னீர் காலிமிர்ச் தயார்.

பன்னீர் காலிமிர்ச் மலாய் வகை கிரேவி. இதில் மிளகின் சுவை அதிகம் இருக்கும். இது ஒரு சைட்டிஷ் உணவாகும். இதை நீங்கள் அனைத்து பிரியாணி வகைகள் மற்றும் ரொட்டி, சாப்பாத்திக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையில் செய்தால் சுவை அள்ளும். கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *