குளிர்காலத்தில் முட்டைக்கோஸ் அதிகமாக சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா..?
உலகளவில் விளையும் மிக முக்கிய காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஒன்றாகும். இது ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் காலே ஆகியவற்றை உள்ளடக்கிய க்ரூசிஃபெரே (Cruciferae) குடும்பத்தைச் சேர்ந்தது. நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கிகிறது.
ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸாக இருக்கும் முட்டைக்கோஸ் குளிர்கால டயட்டிற்கு மிகவும் ஏற்ற காய்கறியாக இருக்கிறது. உடல் பருமன், நீரிழிவு மற்றும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஈர்க்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் முட்டைக்கோஸை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. இதனிடையே பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி விளக்கி உள்ளார். இவரின் கூற்றுப்படி உங்கள் டயட்டில் முட்டைக்கோஸ் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கீழே:
கேன்சரை தடுக்கிறது: முட்டைக்கோஸில் அடங்கி இருக்கும் சல்ஃபர் கன்டன்ட்டான சல்ஃபோராஃபேன் (sulforaphane), குறிப்பாக இதற்கு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆற்றலை கொடுக்கிறது. sulforaphane கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸ்-க்கு கலரை கொடுக்கும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸாக இருக்கின்றன அந்தோசயனின்ஸ் (Anthocyanins). இவை கேன்சர் செல்கள் உடலில் உருவாவதை மெதுவாக்கும் மற்றும் ஏற்கனவே உருவான கேன்சர் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
வீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கின்றன: முட்டைக்கோஸில் இருக்கும் பலவிதமான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நாள்பட்ட அழற்சியை குறைக்க உதவுகின்றன. க்ரஷ் செய்யப்பட்ட முட்டைக்கோஸ் இலைகள் போலந்து நாட்டின் நாட்டு மருத்துவத்தில்பரவலாக பயன்படுத்தப்படும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றாக இருக்கிறது. முட்டைக்கோஸ் போன்ற சிலுவை காய்கறிகளில் காணப்படும் சல்ஃபோராஃபேன், கேம்ப்ஃபெரால் மற்றும் பிற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இவற்றின் அழற்சி எதிர்ப்பு விளைவுக்கு காரணமாக இருக்கலாம்.
மூளை ஆரோக்கியம்: முட்டைக்கோஸில் நிறைந்திருக்கும் அந்தோசயனின்ஸ், வைட்டமின் கே, அயோடின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை இந்த காயை மிகவும் சக்திவாய்ந்த மூளை உணவாக வைத்திருக்கின்றன. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வலுவான மன செயல்பாடுக்கு உதவுகின்றன. பல்வேறு ஆய்வுகளின்படிமுட்டைக்கோஸ் போன்ற சிலுவை காய்கறிகள் (cruciferous vegetables) அல்சைமர் நோயாளிகளின் மூளையில் காணப்படும் கெட்ட டவ் (bad tau) புரதங்களின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
ரத்த அழுத்தத்தை குறைக்கும்: அதிக பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழி. ஏனென்றால் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான வரம்பிற்குள் வைக்க உதவுகிறது. முட்டைக்கோஸ் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பது உயர் ரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவும்.