வருங்கால மன்னராவதற்கு 10 வயது மகனுக்கு இப்போதே பயிற்சி கொடுக்கும் வில்லியம் கேட் தம்பதியர்…

வருங்கால மன்னராவதற்கு 10 வயது மகனுக்கு இப்போதே பயிற்சி கொடுக்கும் வில்லியம் கேட் தம்பதியர்…

இளவரசர் வில்லியம் மீது உருவாக்கியுள்ள தாக்கம்
குறிப்பாக, மன்னர் சார்லசின் உடல் நிலை பாதிப்பு, வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம் மீது பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. மன்னர் சார்லஸ் அரியணையேறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருந்தது. அந்த காலகட்டம், ஒரு மன்னராக செயல்படுவதற்கு முதிர்ச்சியடைந்த அனுபவசாலியாக அவரை மாற்ற அவருக்கு உதவியாக இருந்தது.

ஆனால், தற்போது அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவேளை அவருக்கு ஏதாவது மோசமாக நேரிடுமானால், இளவரசர் வில்லியம் அடுத்து மன்னராக பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், ஒரு மன்னராக செயல்படுவதற்கு தான் முறையாக பயிற்றுவிக்கப்படவில்லை, தயாராக்கப்படவில்லை என கருதுகிறார் இளவரசர் வில்லியம்.

மகனுக்கு இப்போதே பயிற்சி கொடுக்கும் வில்லியம்
மன்னராவதற்கு இளவரசர் வில்லியமுக்கு முறையான பயிற்சி கிடைக்காததால், தங்கள் மகனுக்கும் அதே நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு, மன்னராவதற்கு இப்போதே பயிற்சி கொடுக்கத் துவங்கியுள்ளனர் வில்லியம் கேட் தம்பதியர்.

குட்டி இளவரசரும், வில்லியம் கேட் தம்பதியரின் மூத்த மகனுமான ஜார்ஜ், எப்படியும் ஒருநாள் மன்னராகத்தான் போகிறார். ஆகவே, ராஜ குடும்பத்தில் பிறந்தவர்கள், அதுவும், வருங்கால மன்னருக்கு மூத்த மகனாக பிறந்த நபர், ஒருநாள் மன்னராவது இயற்கையான ஒரு நிகழ்வு என்பதை தங்கள் மகன் புரிந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறார்கள் வில்லியம் கேட் தம்பதியர்.

மன்னராவது என்பது தங்கள் வாழ்வில் ஒரு சாதாரண நிகழ்வு, அதை எண்ணி பயப்படக்கூடாது என்பதை மகன் புரிந்துகொள்ளவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆகவே, இளவரசர் வில்லியம், தான் கலந்துகொள்ளும் சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தன் மகன் ஜார்ஜையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். சமீபத்தில் அவர் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கும், இயற்கை வளங்களை பாதுகாத்தல் தொடர்பான விடயம் ஒன்றிற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றிற்கும் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *