உக்ரைன் கேட்ட ஏவுகணைகளைக் கொடுக்க தயங்கும் ஜேர்மனி: சேன்ஸலர் விளக்கம்
உக்ரைன் கேட்ட ஏவுகணைகளைக் கொடுக்க ஜேர்மனி தயங்குவது ஏன் என்பதற்கு ஜேர்மன் சேன்ஸலர் விளக்கமளித்துள்ளார்.
உக்ரைன் கேட்ட ஏவுகணைகள்
ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன், ஜேர்மனியிடம் Taurus long-range cruise missiles என்னும் ஏவுகணைகளைத் தங்களுக்குத் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த ஏவுகணை, 500 கிலோமீற்றர் தூரம் பாயும் திறன்கொண்டதாகும். அதாவது, உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்குள் இந்த ஏவுகணைகளை ஏவித் தாக்கமுடியும்.
ஜேர்மனி தயக்கம்
ஆனால், அந்த ஏவுகணைகளை உக்ரைனுக்குக் கொடுக்க ஜேர்மனி தங்குகிறது. உக்ரைனுக்கு உதவுவோம், ஆனால், அதனால் போரை அதிகரிக்கும் விருப்பமோ, அல்லது ஜேர்மனியையோ, நேட்டோ அமைப்பையோ போருக்குள் இழுக்கும் விருப்பமோ தங்களுக்கு இல்லை என்பதை நீண்ட நாட்களாகவே வலியுறுத்திவரும் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், ஜேர்மன் வீரர்களை உக்ரைனுக்கு போருக்கு அனுப்புவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது, உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கினால், தாங்கள் ரஷ்யாவுடனான போரில் நேரடியாக ஈடுபட்டதுபோல் ஆகிவிடும் என்று கூறுகிறார் ஷோல்ஸ்.