அருண் விஜய்யின் அம்மாவால் தான் நான் அதையே கத்துக்கிட்டேன்- வனிதா ஓபன் டாக்
வனிதா விஜயகுமார்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் நியாபகத்திற்கு வந்தவர் வனிதா.
சினிமாவில் எப்போதோ நடிக்க தொடங்கிய வனிதா சில படங்களே ஆரம்பத்தில் நடித்துள்ளார், அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தவில்லை.
பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையின் மூலமாக பலரையும் வியக்க வைத்திருந்தார்.
அடுத்து பிக்பாஸில் விளையாடிய வனிதா இப்போது சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் மேக்கப், யூடியூப், துணி கடை என நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார்.
வனிதாவின் பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் வனிதா தனக்கு சமையலில் ஆர்வம் வந்தது குறித்தும், கற்றுக்கொண்டது எப்படி என பேசியுள்ளார். அதில் அவர், எங்க அம்மா ரொம்ப சமைக்க மாட்டாங்க, அவங்க அந்த நேரத்தில் ரொம்ப பிஸியாக இருந்தாங்க.
அந்த நேரத்தில் எங்களுக்கு விதவிதமாக சமைத்துக் கொடுத்தது அருண் விஜய் அண்ணாவோட அம்மா தான். பெரியம்மா நல்லா சமைப்பாங்க, அவங்களோட சமையல் அருமையா இருக்கும்.
எனக்கு அவங்க சமையல் பார்த்து தான் சமைக்க வேண்டும் என்ற ஆர்வமே வந்தது. அதற்கு பிறகு எனக்கு கொஞ்சம் விவரம் தெரிஞ்சு நானும் சமைக்க ஆரம்பித்தேன்.
ஆனாலும் அவங்க சாப்பாடு அருமையாக இருக்கும், எங்க அம்மா எப்பவாவது ஒருமுறை ஒரு சில சாப்பாடு செஞ்சு இருக்காங்க அவ்வளவுதான் என பேசியுள்ளார்.