ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் ஆட்டோவில் பயணம்..!
சென்னையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி என்ற தர்கா உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த தர்காவில் நேற்று (பிப்.26) நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் பங்கேற்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் காரில் வந்திருந்தார். அதன் பின்னர், சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட வந்த அவரைக் காண, ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின் தன் காருக்குச் செல்வதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் செல்லவும், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் தனது காரில் செல்லாமல், அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறி ஏ.ஆர்.ரஹ்மான் சென்றார்.