அஸ்வின் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி நாட்கள்.. இப்போதாவது அந்த ஆசை நிறைவேறுமா?

தர்மசாலா : இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்குப் பிறகு இந்திய அணி வரும் அக்டோபர் மாதத்தில் தான் அடுத்து டெஸ்ட் போட்டியை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தில் இருப்பதால் அவருக்கு உரிய மரியாதையை பிசிசிஐ வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அஸ்வினுக்கு தற்போது 37 வயது ஆகிறது. அவரை ஏற்கனவே வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில் பிளேயிங் லெவனில் சேர்க்காமல் இந்திய அணி நிர்வாகம் ஏமாற்றி வருகிறது. இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அஸ்வினுக்கு கிடைத்திருக்கிறது.

அஸ்வின் வெறும் சுழற் பந்துவீச்சாளர் மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டராகவும் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அஸ்வினுக்கு இருக்கும் கிரிக்கெட் அறிவு மற்றும் சமயோஜித புத்தி தற்போது உலக அளவில் வேறு எந்த வீரருக்குமே இல்லை என்று சொல்லலாம். இப்படிப்பட்ட அஸ்வினுக்கு இந்திய அணி டெஸ்ட் கேப்டன் பொறுப்பை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கும்ப்ளே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலகட்டத்தில் விளையாடிய போது அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டது. டிராவிட்டுக்கு பிறகு சிறிது காலம் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தினார். அதன் பிறகு அவர் ராஜினாமா செய்ததை அடுத்து தோனி அந்த இடத்திற்கு வந்தார்.

கர்நாடகாவை சேர்ந்த கும்ப்ளேவுக்கு இந்த மரியாதை கிடைத்தபோது தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு ஏன் இந்த மரியாதையை வழங்க பிசிசிஐ யோசித்து வருகிறது என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது. அஸ்வின் தன்னுடைய கிரிக்கெட் அறிவால் எதிரணியை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கும் புத்தி கூர்மை உடையவர். அப்படி இருக்கும்போது அஸ்வினுக்கு மட்டும் ஏன் இந்த வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து அஸ்வினை அந்த பொறுப்புக்கு உட்கார வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *