விண்வெளிக்கு செல்லும் குழுவில் இடம்பெற்ற தமிழர்
விண்வெளிக்கு செல்லும் நான்கு பேரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த நான்கு பேரில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.
இதன்படி குரூப் கப்டன் அஜித் கிருஷ்ணன் என்ற தமிழரே விண்வெளிக்கு செல்லவுள்ளார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்
ஏனையவர்களாக குரூப் கப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கப்டன் அங்கத் பிரதாப், விங் கொமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் அடங்குகின்றனர்.
குரூப் கப்டன் அஜித் கிருஷ்ணன் ஏப்ரல் 19, 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். உதகையில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் படித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அக்கடமியில் தேர்ச்சி பெற்று 2003-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். 2,900 மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். மிக் 21, மிக் -29, ஏஎன் -32 உள்ளிட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.
ககன்யான் திட்டப்பணிகள்
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் ஆய்வு மையத்தில் ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.