Basmati Rice Payasam: பாஸ்மதி அரிசி பாயாசம் செய்வது எப்படி?
பாயாசம் என்றாலே அனைவரும் அதிகம் விரும்பி சாப்பிடும் ஓர் இனிப்பு வகை தான்.
அதிலும் சைவ சாப்பாடு சமைத்தால் போதும், வீட்டில் இருக்கும் அனைவரும் பாயாசம் தயாரா என்று கேட்பார்கள்.
தங்களிடம் இருக்கும் திறமைகளை வைத்து வித்தியாசமான முறையில் பாயாசம் செய்வதுண்டு.
அந்தவகையில் பாஸ்மதி அரிசி வைத்து எப்படி சுவையான பாயாசம் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி (ஊறவைத்தது) – 1/2 கப்
பால் – 3 கப்
முந்திரி – தேவைக்கேற்ப
ஏலக்காய்- தேவைக்கேற்ப
நெய் – தேவைக்கேற்ப
சர்க்கரை – 1/4 கப்
குங்குமப் பூ – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பால் கொதித்ததும் அதில் அரிசியைச் சேர்த்து, குறைந்த தீயில் சமைக்க வேண்டும்.
அரிசி வதங்கியதும், சர்க்கரை சேர்க்கவும்.
வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
சர்க்கரை கரைந்ததும் அதில் ஏலக்காய் சேர்க்கவும்.
இறுதியாக நெய் மற்றும் முந்திரி சேர்க்கவும்.