Fried Chicken Masala: நாவூறும் சுவையில் வறுத்த சிக்கன் மசாலா: எப்படி செய்வது?
இனி வீட்டில் சிக்கன் எடுத்தால் இந்தவறுத்த சிக்கன் மசாலா செய்து சாப்பிட்டு பாருங்கள்.
இந்த வறுத்த சிக்கன் மசாலா இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வறுத்த சிக்கன் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் பொறிக்க
சிக்கன்- 1kg
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
சீரக தூள்- ½ ஸ்பூன்
காஸ்மீரி மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா- ½ ஸ்பூன்
எலுமிச்சை பழம்- ½
உப்பு- தேவையான அளவு
தயிர்- 2 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
மசாலா செய்வதற்கு
எண்ணெய்- 2 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம்- 2
வரமிளகாய்- 2
தக்காளி- 2
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
சிக்கன் மசாலா- 2 ஸ்பூன்
மல்லி தூள்- 1 ஸ்பூன்
சீரக தூள்- ½ ஸ்பூன்
கருவேப்பிலை- 2 கொத்து
செய்முறை
முதலில் சிக்கனை 2- 3 முறை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
பின் சிக்கனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஸ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா,எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் தயிர் சேர்த்து பிணைந்து 1 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான சூட்டில் கலந்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
இதன்பிறகு ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
பின் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா, மல்லி தூள், சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் இதில் பொரித்த சிக்கன் சேர்த்து தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் இறுதியாக கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான வறுத்த சிக்கன் மசாலா தயார்.