Ather-ன் 450 Apex Electric Scooter உற்பத்தி தொடக்கம்: விலை, சிறப்பம்சங்கள் இதோ

Ather-ன் இணை நிறுவனர் தங்கள் 450 Apex Electric Scooter-ன் தயாரிப்பை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.

450 Apex-ன் டெலிவரியை அடுத்த மாதம் அதாவது மார்ச் 2024-ல் Ather Energy நிறுவனம் துவங்க இருக்கிறது.

இந்த Electric Scooter-ன் Ex-showroom விலை ரூ.1.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Ather Energy நிறுவனம் ஏற்கனவே இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ரூ.2,500 டோக்கன் தொகையில் எடுக்க தொடங்கியுள்ளது.

விரைவில் டெலிவரி செய்யப்படவிருக்கும் 450 Apex பல Updates-களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்
Ather 450 Apex Scooter-ல் 450X-ல் இருக்கும் அதே 3.7kWh Battery pack கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் 450 Apex-ல் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய Regenerative braking system காரணமாக, இதன் ITC Range 157km-ஆக அதிகரித்துள்ளதாக நிறுவனம் கூறி உள்ளது.

அதே போல 450 Apex-ன் Top speed மணிக்கு 100km ஆகும். மேலும் 0-40km வேகத்தை 450 Apex வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். இது 450X-ஐ விட 0.4 விநாடிகள் வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த Scooter-ல் Initial acceleration 13 சதவீதமும், மணிக்கு 40-80km வேகம் 30 சதவீதமும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

450 Apex-ஆனது PMS Electric motor மூலம் அதிக ஆற்றலை பெறுகிறது இப்போது இது 7 kW (9.3 bhp)-ஐ உற்பத்தி செய்கிறது.

அதே நேரம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 450X-ல் 6.4 kW Motor கொடுக்கப்பட்டு 8.5bhp Power-ஐ உற்பத்தி செய்கிறது. எனினும் இரண்டின் Peak Dark-ம் மாறாமல் 26Nm-ஆக அப்படியே இருக்கிறது.

450 Apex-ல் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சம் Magic Twist ஆகும். இது புதிய சவாரி அனுபவங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயணத்தின்போது நிலையான மற்றும் நம்பகமான Breaking Experience-ஐ வழங்கும் வகையில் “Magic Twist” அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது Battery-ன் Charge status-ஐ பொருட்படுத்தாமல் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான Braking-ஐ வழங்குகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *