பாலிடெக்னிக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிப்பு..!
தமிழக மாணவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை பாலிடெக்னிக் கல்லூரிகள் வழங்கி வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் உள்ள 600-க்கும் அதிகமான பாலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகள் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இயக்குனரகம் மூலம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த வகையில் இக்கல்வி ஆண்டிற்கான (2023 – 2024) இரண்டாவது செமஸ்டர் தேர்வானது வருகின்ற மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கப்படும் என கல்வி இயக்குனரகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் ஏப்ரல் 19ம் தேதிக்குள் நடத்தி முடித்து அதன் பின் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதன் பின் அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 10ம் தேதி முதல் துவங்கப்படும் எனவும் இயக்குனரகம் வெளியிட்ட தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.