சரும பிரச்சனைகளை ஒரே அடியாக தவிர்க்க வேண்டுமா? ‘இந்த’ பானங்களை குடித்து பாருங்கள்..
சரும பாதிப்புகள் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முகத்தில் உள்ள பாக்டீரியாக்கள், முகத்தில் உள்ள போர்ஸ்களில் தங்கும் போது முகச்சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும். அது மட்டுமன்றி, தைராய்டு, குடல் பிரச்சனைகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல் போன்ற பாதிப்புகளாலும் சருமத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தோல் பாதிப்புள்ள பிறரின் சருமத்துடன் தொடர்பு கொண்டாலும் சரும பாதிப்பு ஏற்படும்.
தோள் பாதிப்புகளை போக்கும் பானங்கள்:
சரும பாதிப்புகளை தீர்ப்பதற்கு சில இயற்கையான வழிமுறைகள் உள்ளன. இந்தியன் கொம்பூச்சா என்ற பானத்தில் இருந்து, காரட் மற்றும் பிற காய்கறிகளை வைத்து தயாரித்த பானங்கள் முதல் பல பானங்கள் இதற்கு உதவும். இந்த பானங்களினால் ஒவ்வொருவரின் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அதனால், இவற்றை எடுத்துக்கொள்வதற்கு முன்னர், மருத்துவரிடம் அறிவுரையை கேட்கவும்.
அது என்ன பானம்?
இந்த பானத்தை கேரட், கடுகு மற்றும் சில மசாலாக்களை சேர்த்து செய்ய வேண்டும். இதனை, உடலில் புரதச்சத்தை ஏற்றவும், சரும பொலிவிற்காகவும் உபயோகப்படுத்தலாம்.
இதில் உள்ள நன்மைகள் என்ன?
இந்த பானத்தில் கேரட் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். கேரட்டில், பீட்டா கேரட்டின் சத்து உள்பட பல்வேறு சத்துகள் உள்ளன. இந்த பானம் குடிப்பதால், சீக்கிரமாகவே வயதாகும் தோற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம். வைட்டமின் சி சத்துக்களால் இது நிரம்பிய பானம் என்பஹ்டால், சருமத்தில் சுருக்கம் விழுவதையும், கோடு விழுவதையும் தவிர்க்கலாம்.
முகம் பளபளப்பாகும்..
இந்த பானத்தில், வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், சரும செல்களுக்கு ஊட்டமளித்து தோலை உள்ளூர ஈரப்பதமாக்குகிறது. இதனால், ஆரோக்கியமான சருமத்தை பேணி காக்கலாம். அழகான தோல் அமைப்பிற்கு, இந்த பானம் பங்களிக்கும்.
முகப்பருக்களை தவிர்க்கும்:
இந்த பானத்தை பதப்படுத்தப்படும் முறையில் செய்ய வேண்டும். இதை குடிப்பதால் உடலில் செரிமான கோளாறுகளை சரிசெய்யலாம். மேலும், இது கிளியர் ஆன சரும பொலிவிற்கும் உதவுகிறது. முகப்பருக்கள், முகம் வீங்குதல் ஆகியவற்றையும் இந்த பானம் தவிர்க்கிறது. செரிமான சக்தி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமன்றி, முகத்தை பொலிவாக வைப்பதற்கும் உதவுகிறது. புரத சத்துக்களை சரியாக உறிஞ்சி கொள்வதற்கும் இந்த பானம் உதவுகிறது. இதை குடிப்பதனால் முகச்சருமம் ஹெல்தியாக இருக்கலாம்.
சருமத்தை ஈரப்பதமாக்கி சமநிலைப்படுத்துகிறது:
நீர்ச்சத்துகள் அதிகம் நிறைந்த காய்கறிகள் இந்த பானத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இது, சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்ட்ரைசராகவும் பயன்படுத்தப்படுகிறது. இது, சருமத்தை வறட்சி அடைய செய்ய விடாது. இதனால், முகம் பொலிவிழக்காமல் தடுக்கலாம். சருமத்தில் பிஹெச் அளவினை பாலன்ஸ் செய்வதற்கும் இந்த பானம் உதவுகிறது.
இதை செய்வது எப்படி?
கேரட் அல்லது பீட்ரூட்டை உபயோகித்து இந்த பானத்தை உருவாக்கலாம். சுத்தமான தண்ணீர், கல் உப்பு, கடுகு விதைகள் மற்றும் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை கொண்டு இந்த பானத்தை உருவாக்கலாம். இந்த உணவு பொருட்கள் அனைத்தையும் தண்ணீரில் சேர்த்த பிறகு, இரண்டு முதல் மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். இதை தினமும் ஒரு கிளாஸ் குடித்தால் உடலுக்கு நல்லது.