மலையாள நடிகையை அடித்த இயக்குனர் பாலா.. தலைதெறிக்க ஓடிய 22 வயது நடிகை
இயக்குனர் பாலா
இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர். இவர் இயக்கிய சேது, நான் கடவுள், நந்தா, பிதாமகன் போன்ற பல திரைப்படங்கள் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகளை இயக்குனர் பாலா அடிப்பார் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் சிலர் படத்திலிருந்து வெளியேறியதாக கூட பேசப்படுகிறது.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகை மாமிதா பைஜூ இயக்குனர் பாலா குறித்து ஷாக்கிங் தகவலை ஒன்றை கூறியுள்ளார். பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஆனால், முதன் முதலில் ஹீரோவாக நடித்தது சூர்யா என்பதை நாம் அறிவோம். படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கும்போதே, சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக தான் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க வந்தார்.
நடிகையை அடித்த பாலா
சூர்யா எப்படி விலகினாரோ, அதே போல் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூவும் வணங்கான் படத்திலிருந்து விலகினார். படப்பிடிப்பில் இயக்குனர் பாலா நடிகை மமிதா பைஜூவை அடித்துள்ளார்.
ஒரு காட்சியில் மூன்று முறைமேல் நடித்தாராம் மமிதா பைஜூ. அந்த காட்சி அவருக்கு சரியாக புரியவில்லை, ஆகையால் மூன்று டேக் ஆகியுள்ளது. அப்போது இயக்குனர் பாலா நடிகை மமிதா பைஜூவின் தோள்பட்டையில் அடித்துள்ளார். இந்த தகவலை நடிகை மமிதா பைஜூ சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.