தங்கச்சியை கொஞ்சி விளையாடும் வனிதாவின் மகன்: வைரலாகும் வீடியோ
வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான ஸ்ரீஹரி, தங்கை ஜெனிதாவை கொஞ்சி விளையாடும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமார், இவரது மகள் வனிதா விஜய்குமார் என்பது அனைவரும் அறிந்ததே.
சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகமானாலும், அடுத்தடுத்து வெற்றி படங்கள் அமையாததுடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இவருக்கு ஸ்ரீஹரி, ஜோவிகா என இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் முதல் கணவருடன் விவாகரத்து பெற்றார்.
அடுத்ததாக தொழிலதிபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜெனிதா என்ற மகள் இருக்கிறார்.
அந்த திருமணமும் விவாகரத்தில் முடிய குடும்பத்துடன் பிரச்சனை என இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் வனிதா.
இவருக்கு ரசிகர்கள் மத்தியில் புகழை பெற்றுத்தந்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான், தொடர்ந்து சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வனிதா பிள்ளைகளின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, அதில் வனிதான் மூத்த மகனான ஸ்ரீஹரி, தங்கை ஜெனிதாவை கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்.