₹ 1.5.40 லட்சத்தில் மஹிந்திரா தார் எர்த் எடிசன் விற்பனைக்கு வெளியானது
மஹிந்திரா நிறுவனத்தின் 3 கதவுகளை பெற்ற தார் எஸ்யூவி மாடலில் எர்த் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு ரூ.15.40 லட்சம் முதல் ரூ.17.60 லட்சம் விலைக்குள் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு எடிசனில் புதிதாக டெஸர்ட் ஃப்யூரி என்ற மேட் நிறத்தை பெற்று கூடுதலாக வெளிப்புறத்தில் தார் எர்த் எடிசன் பேட்ஜிங், அலாய் வீலில் தார் பிராண்டிங் இன்ஷர்ட், பாடி நிறத்திலான கிரில் மற்றும் ORVM பெற்று மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட 4X4 பேட்ஜிங் மற்றும் மஹிந்திரா லோகோ பெற்றுள்ளது.
இன்டிரியரில் டெக்கேரேட்டிவ் வின் பிளேட், லெதரெட் இருக்கைகள், டூன் டிசைன் ஹெட்ரெஸ்ட்கள், பீஜ் தையல், டூயல் டோன் ஏசி வென்ட், பியானோ பிளாக் ஹவுசிங்கில் எச்விஏசி, ஸ்டீயரிங்கில் டார்க் குரோம் ட்வின் பீக் மஹிந்திரா லோகோ, கியர் நாப்பில் டார்க் குரோம் பூச்சூகள் உள்ளன.
மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல், 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2-லிட்டர் டீசல் எஞ்சின் விருப்பத்துடன் கிடைக்கின்றது. இந்த இரண்டு ஆப்ஷனிலும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பெற்றுள்ளது.
Mahindra Thar Earth Edition Price
Earth Edition Petrol MT INR 15.40 லட்சம்
Earth Edition Petrol AT INR 16.99 லட்சம்
Earth Edition Diesel MT INR 16.15 லட்சம்
Earth Edition Diesel AT INR 17.60 லட்சம்
கூடுதலாக இந்த எடிசனுக்கு முன் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்ட்கள், 7டி ஃப்ளோர் மேட்ஸ் மற்றும் கம்ஃபர்ட் கிட் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்செரீஸ் கூடுதல் கட்டணத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.