வாவ்! வெறும் 100 ரூபாய்.. கேன்சர்-க்கு மருந்து கண்டுபிடித்த டாடா இன்ஸ்டிடியூட்..!

இந்தியாவின் முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை நிறுவனமாகத் திகழும் மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட், மனித உடல் புற்றுநோய் மீண்டும் தாக்குவதைத் தடுக்கும் எளிய சிகிச்சை மற்றும் மருந்தைக் கண்டறிந்ததாக அறிவித்துள்ளது.

அதாவது முதல் முறை கேன்சர் பாதிப்பை எதிர்கொண்ட ஒருவருக்கு மீண்டும் கேன்சர் வர வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் முதல் முறை கேன்சர் பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு 2வது முறை கேன்சர் வருவதைத் தடுக்கும் மருத்தை மாத்திரை வடிவில் டாடா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது.

டாடா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ள இந்த மாத்திரை, நோயாளிகளுக்குப் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுப்பதோடு, கதிர்வீச்சுச் சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை போன்ற சிகிச்சைகளின் பக்கவிளைவுகளை 50 சதவீதம் வரை குறைக்கும் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நினைவு மருத்துவமனையின் மூத்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ராஜேந்திர பத்வே, இந்த மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக் குழுவில் உள்ளார். இவர் NDTV செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஆராய்ச்சிக்காக எலிகளில் மனித புற்றுநோய் செல்கள் செலுத்தப்பட்டன. இதன் விளைவாக எலிகளில் டியூமர் கட்டி உருவானது. பின்னர் அந்த எலிகளுக்குக் கதிர்வீச்சுச் சிகிச்சை, மருந்து சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தப் புற்றுநோய் செல்கள் இறக்கும் போது, சிறிய துண்டுகளாக உடைந்து குரோமடின் (Chromatin) துகள்களாக உருவாகிறது. இந்தத் துகள்கள் இரத்த ஓட்டம் மூலம் உடலின் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியும். அவை ஆரோக்கியமான செல்களுக்குள் நுழையும்போது, அந்தச் செல்களையும் புற்றுநோயுள்ளதாக மாற்றும் ஆற்றல் கொண்டவை என விளக்கம் கொடுத்தார்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண, டாக்டர்கள் எலிகளுக்கு ரெஸ்வெராட்ரோல் மற்றும் காப்பர் (R+Cu) கொண்ட ஆக்ஸிஜனேற்ற மாத்திரைகளை வழங்கினர் என்று டாக்டர் ராஜேந்திர பத்வே இப்பேட்டியில் தெரிவித்தார். R+Cu ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை உருவாக்குகிறது, அவை குரோமடின் துகள்களை அழிக்கின்றன.

இந்த மாத்திரை புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகளைச் சுமார் 50 சதவீதம் வரை குறைக்கும். புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுப்பதில் இது சுமார் 30 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும். மேலும், இது கணையம், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய்க்கும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

டாடா டாக்டர்கள் இந்த மத்திரையைக் கண்டுபிடிப்பதிலும், உருவாக்குவதிலும் ஏறக்குறைய பத்தாண்டுகளாகப் பணியாற்றினர். இந்த டேப்லெட் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

Tata Institute of Fundamental Research விஞ்ஞானிகள் இந்த மத்திரையை அங்கீகரிக்க FSSAI-க்கு விண்ணப்பித்துள்ளனர். ஒப்புதல் கிடைத்த பிறகு, ஜூன்-ஜூலை முதல் சந்தையில் கிடைக்கும். புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த இந்த டேப்லெட் பெரிய அளவில் உதவும் என்று மூத்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கூறினார்.

கேன்சர் சிகிச்சைக்கான செலவுகள் லட்சங்கள் முதல் கோடிகள் வரை இருக்கும் வேளையில், இந்த மாத்திரை நாட்டின் எல்லா இடங்களிலும் வெறும் ₹ 100 க்கு கிடைக்கும் என்று டாக்டர் ராஜேந்திர பத்வே கூறினார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *