வொர்க் விசா, வொர்க் பெர்மிட் உள்ள வித்தியாசம் என்ன?

வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும்போது இரண்டு விதமான அனுமதிகள் வழங்கப்படுகின்றன. ஒன்று வொர்க் விசா. மற்றொன்று வொர்க் பெர்மிட். இரண்டுக்கும் தனித்தனியான விதிமுறைகள் உள்ளன.

வெளிநாடுகளில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வந்து தங்கியிருப்பதற்காக அந்நாட்டு அரசுகள் விசாக்களை பயணிகளுக்கு வழங்குகின்றன. சுற்றுலா, கல்வி, வியாபாரம் போன்ற விஷயங்களுக்காக இந்த விசாக்கள் வழங்கப்படுகின்றன.

விசாவில் பல வகை இருக்கும் வேலையில் ஒரு நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டில் வேலை செய்வதற்காகவே வாங்குப்படும் விசா தான் வொர்க் விசா. இது வேலைவாய்ப்பு அடிப்படையில் அளிக்கப்படும் விசா.

அதேவேளையில் வொர்க் பெர்மிட் என்பது ஒரு நாட்டில் குடியுரிமை இல்லாமல் நீண்ட காலமாக பிற விசாக்களில் தங்கியிருப்பவர், வேலை செய்ய முடிவு செய்தால், இதற்கு இந்த வொர்க் பெர்மிட் தேவைப்படும். ஒருவர் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது வேலை செய்வதற்காக தரப்படும் அனுமதி தான் இந்த வொர்க் பெர்பிட்.

குறுகிய கால நிகழ்வுகளான சுற்றுலா, மாநாடுகள், சர்வதேச கல்வி வாய்ப்புகள் போன்றவற்றுக்கு விசாக்கள் தேவைப்படும். ஆனால் வெளிநாட்டில் தங்கி வேலைபார்ப்பதற்கு கட்டாயம் வொர்க் பெர்மிட் தேவை.

பணிகள் சாராத செயல்களில் ஈடுபடவும் கலாசார நிகழ்வுகளில் பங்கேற்கவும் விசாக்கள் தேவை. இருந்தாலும் பெரும்பாலான சுற்றுலா மற்றும் வணிக விசாக்கள் வேலை செய்வதற்கு அனுமதிக்காது.

மற்றொரு நாட்டில் வேலை செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை மக்களுக்கு வொர்க் பெர்மிட்கள் வழங்குகின்றன. பல சமயங்களில் நிரந்தரமாகத் தங்கவும் அனுமதிக்கிறது. ஆனால் அது மிகவும் குறிப்பிட்ட தொழில் வாய்ப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

வொர்க் விசா மற்றும் வொர்க் பெர்மிட் ஆகியவற்றுக்கு இடையேயான இலக்குகள் அவரவர் தேவையின் அடிப்படையாகக் கொண்டது. எனவே விசாக்கள் பல்வேறு நோக்கங்களுக்காக அளிக்கப்படுகின்றன. வொர்க் பெர்மிட்கள் குறிப்பாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை அங்கீகரிக்கின்றன.

வெளிநாட்டில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கினாலும் அல்லது புதிய முன்னெடுப்புகளைச் செய்தாலும் வொர்க் பெர்மிட் தேவை.

உங்கள் நோக்கம் குறுகிய பயணமாகவோ அல்லது வேலை சாராத விஷயமாக இருந்தாலோ விசா சரியான தேர்வாகும்.

வெளிநாட்டில் இருக்கும் போது வேலையில் ஈடுபடுவதற்கு வொர்க் பெர்மிட் அவசியம். வேலை செய்யப்போகும் நாட்டில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய இந்தப் பெர்மிட் வேண்டும்.

வொர்க் பெர்மிட்களில் ஏழு முக்கிய வகைகள் உள்ளன:

ஹாட் ஒர்க் பெர்மிட், கோல்ட் ஒர்க் பெர்மிட், கன்ஃபைன்ட் ஸ்பேஸ் ஒர்க் பெர்மிட், கெமிக்கல் ஒர்க் பெர்மிட், ஹைட் ஒர்க் பெர்மிட் மற்றும் அகழாய்வு அனுமதி. ஒவ்வொரு பணி அனுமதியும் பணியின் தன்மை மற்றும் அதில் உள்ள ஆபத்தைப் பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு தேர்வு செய்வது நல்லது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *