பிரித்தானிய மகாராணியை விட பணக்காரர் என அழைக்கப்பட்ட பிரதமர் ரிஷியின் மனைவி இந்தியாவில் செய்துள்ள செயல்
பிரித்தானிய மகாராணியை விட பணக்காரர் என அழைக்கப்பட்ட பிரதமர் ரிஷியின் மனைவி, இந்தியாவில் சர்வசாதாரணமாக, பாதுகாவலர்கள் யாரும் இன்றி, தனது மகள்களுடன் ஷாப்பிங் செய்துவரும் காட்சிகள் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
இந்தியாவில் எளிமையாக வலம் வந்த ரிஷியின் மனைவி
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியும், இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி சமீபத்தில் இந்தியா வந்திருந்த நிலையில், அவர் தனது தந்தை மற்றும் மகள்களுடன் நூலகம் ஒன்றில் புத்தகங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஒரு நாட்டின் பிரதமரின் மனைவி, எளிமையாக, பாதுகாவலர்கள் யாரும் இன்றி வலம் வரும் அந்தக் காட்சிகளைக் கண்ட மக்கள், அக்ஷதாவின் எளிமையை வியந்து பாராட்டிவருகிறார்கள்.
கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட கோடீஸ்வரர்
அதேபோல, கோடீஸ்வரரான நாராயணமூர்த்தி, எளிமையாக தன் மகளான அக்ஷதாவுடன் சர்வசாதாரணமாக கடை ஒன்றில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடும் காட்சிகள் ஏற்கனவே வைரலாகியுள்ளன.
இந்நிலையில், அக்ஷதாவும் அவரது பிள்ளைகளும்கூட பொது இடத்தில் எளிமையாக நடமாடும் காட்சிகளும் மக்களைக் கவர்ந்துள்ளதை, சமூக ஊடகங்களில் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களிலிருந்து அறியமுடிகிறது.