அமீரகத்தில் உள்ள 900 கைதிகளை விடுவிக்க கோடிக்கணக்கில் நன்கொடை.., யார் அந்த இந்திய தொழிலதிபர்?

அமீரகத்தில் உள்ள 900 கைதிகளை விடுவிக்க இந்திய தொழிலதிபர் ஒருவர் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியுள்ளார்.

உலகில் கடுமையான சட்டங்களை கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) ஒன்றாகும். இங்கு, தவறு செய்பவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி தண்டனை வழங்குவதால் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக, இதில் வெளிநாடுகளில் இருந்து வரும் கூலி தொழிலாளிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இஸ்லாமிய சட்டத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கினால் கைதிகள் விடுதலை செய்ய வாய்ப்பு உருவாகும். ஆனால், கூலி வேலை செய்பவர்களால் பல லட்சம் கொடுப்பது சாத்தியமில்லை.

இதனால், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இந்த மாதிரியானவர்களுக்கு நன்கொடை அளித்து உதவி செய்கின்றது. அந்தவகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியுள்ளார்.

அவர் யார்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் பெரோஸ் மெர்ச்சென்ட் (66) (Firoz Merchant) ஒரு நகைக்கடை உரிமையாளர் ஆவார். இவர், ‘The Forgotten Society’ என்ற தொண்டு நிறுவனம் மூலம் பல நல்ல விடயங்களை செய்து வருகிறார்.

அந்தவகையில், சிறையில் இருக்கும் கைதிகளுக்கு உதவும் வகையில் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார். அதன்படி, கடந்த 2008 -ம் ஆண்டு தொடங்கிய The Forgotten Society மூலமாக இதுவரை அமீரகம் முழுவதும் 900 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, Ajman -யைச் சேர்ந்த 495 கைதிகள், Fujairah -லிருந்து 170 கைதிகள், Dubai -யிலிருந்து 121 கைதிகள், Umm Al Quwain -லிருந்து 69 கைதிகள், Ras Al-Khaimah -விலிருந்து 28 கைதிகளை விடுவிக்க Firoz Merchant முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அமீரகத்தில் உள்ள மத்திய சிறைகளில் இருக்கும் காவல்துறை இயக்குநர் ஜெனரல்களுடன் இணைந்து இந்த சேவையை Firoz செய்து வருகிறார்.

அதன்படி, ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக 900 கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு 10 லட்சம் திர்ஹாம் (1 million dirhams) நன்கொடையாக அளித்துள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.2.25 கோடி ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *