பேய்களின் சமையலறை இது தான் – கொடைக்கானலில் உள்ள குணா குகை பற்றிய உண்மை தகவல்
கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அது பேய்களின் சமையலறை என்பது குறித்து தெரியுமா?
பேய்களின் சமையலறை இது தான்
கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகையை முந்தைய காலத்தில் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று தான் அழைத்துள்ளனர். அதாவது ‘பேய்களின் சமையல் அறை’ என அழைக்கப்பட்டது.
இந்த குகையானது 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளமையால் சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்ட இடமென்றே கூறலாம்.
இக்குகை ‘பேய்களின் சமையல் அறை’ என்று அழைக்கப்படதற்கு பின்னால் ஒரு காரணமும் உள்ளது.
அதாவது இந்த பகுதி ஆழமான குகை என்பதால் இதற்கு இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
1821 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பி.எஸ்.வார்டு என்பவராவ் இந்த இடமானது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுப்பிடிக்கப்பட்ட காலத்தில் பிரபலமடையாமல் இருந்தாலும், கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.
ஏனென்றால் 1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா என்ற படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ பாடலில் காட்டப்படும் குகை இது தான்.
குணா படத்தின் மூலம் பிரபலமடைந்ததால் இக்குகையின் பெயரும் குணா என்றே வைக்கப்பட்டது.
இதற்கு பின் குகையை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.
குகையின் பள்ளத்தில் தவறி விழுந்து பலரும் உயிரிழந்துள்ளார்கள். எனவே வனத்துறையின் ஆலோசனையின் பெயரில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு குணா குகை மூடப்பட்டது.
பின் சுற்றுலா தளமாக மாறியதனால் வனத்துறையால் மரப்பாலம் அமைக்கப்பட்டது. அதனுடாக பாதுகாப்பாக சுற்றுலா பயணிகள் குகையை கண்டு ரசித்தனர்.
பின்னடைவில் மரப்பாலமும் சிதைந்து விட்டதால் குணா குகைக்கு அருகே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது மஞ்சுமேல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படத்தில் குணா குகை முக்கிய இடமாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.