LIC Policy: மாதம் ரூ.1302 செலுத்தினால் போதும்… 27 லட்ச ரூபாயை பெறலாம்
LIC அதன் வாடிக்கையாளர்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான், LIC ஜீவன் உமாங் பாலிசி திட்டம்(Jeevan-Umang-policy ).
இந்த ஜீவன் உமாங் பாலிசி திட்டத்தில் மிகச் சிறிய அளவில் முதலீடு செய்து குறுகிய காலத்திலேயே லட்சங்களில் சம்பாதிக்கலாம்.
LIC ஜீவன் உமாங் பாலிசி திட்டம் பாலிசிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வருமானம் மற்றும் காப்பீட்டுத் தொகையின் இரட்டைப் பலன்களை வழங்குகிறது.
ஜீவன் உமாங் பாலிசி திட்டம் (Jeevan-Umang-Policy)
இந்த ஜீவன் உமாங் பாலிசி திட்டத்தின் முக்கிய அம்சங்களில் வரி இல்லாத முதிர்வு மற்றும் இறப்பு பலன்கள் மிக முக்கியமானவை.
100 வயது வரையிலான வாழ்நாள் ஆபத்துக் காப்பீடு மற்றும் 30 ஆண்டுகளில் இருந்து உத்தரவாதமான வருமானம் ஆகியவை இந்த பாலிசியில் அடங்கும்.
இந்தத் திட்டம் பிரீமியம் செலுத்தும் காலத்தின் முடிவில் இருந்து வருடாந்திர உயிர் வாழ்வு பலன்களை வழங்குகிறது.
குறைந்தபட்ச அடிப்படை உத்தரவாதத் தொகை ரூ.2,00,000
அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை எல்லை இல்லாத
கொள்கை காலம் 100 ஆண்டுகள் – (கழித்தல்) நுழையும் வயது
நுழைவதற்கான குறைந்தபட்ச வயது 90 நாட்கள்
நுழைவதற்கான அதிகபட்ச வயது 55 ஆண்டுகள்
பிரீமியம் செலுத்தும் காலம் 30- 70
இந்த பாலிசியை எடுத்து ஒவ்வொரு மாதமும் ரூ.1,302 பிரீமியம் செலுத்தினால் ஒரு வருடத்தில் ரூ.15,298 செலுத்தியிருப்பீர்கள்.
30 ஆண்டுகளுக்கு இதைத் தொடர்ந்தால் உங்களுக்கு ரூ.4.58 லட்சம் கிடைக்கும். 31ஆவது ஆண்டிலிருந்து 100ஆவது ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு ரூ.40,000 கிடைக்கும்.
மொத்தமாக உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.27.60 லட்சம்.
ஜீவன் உமாங் பாலிசியின் கீழ், நீங்கள் 15, 20, 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.
இந்த ஜீவன் உமாங் பாலிசியில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம்.
பாலிசியுடன் ஓய்வூதியம் பெற விரும்புவோர் மற்றும் அவர்களின் இறப்புக்குப் பிறகு தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய தொகையைக் கொடுத்து உதவ விரும்புவோருக்கு இந்த பாலிசி சிறந்த தேர்வாக இருக்கும்.
LIC யின் சிறந்த மூன்று பாலிசிகள்
1. ஜீவன் லைஃப் பாலிசி (Jeevan-Labh-Policy)
LIC -யின் ஜீவன் லஃப் பாலிசி என்பது வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும், இணைக்கப்படாத, லாபத்துடன் கூடிய எண்டோவ்மென்ட் பிளான் ஆகும்.
இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் கலவையை வழங்குகிறது.
இந்த பிளான் மெச்சூரிட்டிக்கு முன் பாலிசிதாரர் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்தால் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கிறது.
இந்த திட்டம் LIC வழங்கும் best-selling endowment பிளான்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வயது- 8 ஆண்டுகள்
அதிகபட்ச வயது- 50-59 ஆண்டுகள்
அடிப்படைத் தொகை- ரூ 2,00,000 முதல் வரம்பு இல்லை
அதிகபட்ச முதிர்வு வயது- 75
2. புதிய எண்டோமென்ட் பிளான் (New Endowment Plan)
LIC புதிய எண்டோவ்மென்ட் திட்டம் என்பது Non-Linked Insurance பாலிசியாகும். இது உத்தரவாதமான வருமானம் மற்றும் போனஸ் வழங்குகிறது.
12 முதல் 35 ஆண்டுகள் வரை பாலிசியைப் பெறலாம். பாலிசிதாரர்களுக்கு மெச்சூரிட்டிக்கு பின் மொத்தத் தொகையை வழங்குகிறது.
மேலும், எதிர்பாராத விதமாக மெச்சூரிட்டிக்கு முன் எந்த நேரத்திலும் இறந்த பாலிசிதாரரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குகிறது.
குறைந்தபட்ச வயது- 8 ஆண்டுகள்
அதிகபட்ச வயது- 55 ஆண்டுகள்
அடிப்படைத் தொகை- ரூ 1,00,000 முதல் வரம்பு இல்லை
அதிகபட்ச முதிர்வு வயது- 75
3. நியூ ஜீவன் ஆனந்த் (New Jeevan Anand)
LIC-ன் புதிய ஜீவன் ஆனந்த் என்பது Non-linked, Participating, Individual, ஆயுள் உத்தரவாத திட்டமாகும்.
இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் இரட்டைப் பலனை வழங்குகிறது. பாலிசியின் முடிவில் முதலீட்டாளருக்கு மொத்த தொகையையும் வழங்குகிறது.
மேலும், எதிர்பாராத விதமாக காப்பீடு செய்தவர் மரணித்தால் இது நிதி பாதுகாப்பை வழங்குகிறது.
குறைந்தபட்ச வயது- 8 ஆண்டுகள்
அதிகபட்ச வயது- 50 ஆண்டுகள்
அடிப்படை தொகை- ரூ 1,00,000 முதல் வரம்பு இல்லை
அதிகபட்ச முதிர்வு வயது- 75