Driving Licences -யை இனி இப்படி மட்டுமே பெற முடியும்.., தமிழக அரசு புதிய அறிவிப்பு
ஓட்டுநர் உரிமத்தை எக்காரணம் கொண்டும் நேரடியாக வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சாலைகளில் வாகனங்கள் இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமம் (Driving licences) இன்றியமையாதது. அப்படி சாலைகளில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு சாலை போக்குவரத்து விதிகளை அறிந்திருப்பதோடு, அது தொடர்பான தேர்வையும் எழுதி தேர்ச்சி அடைய வேண்டும். அதன்பின்பு RTO அலுவலகத்துக்கு ஓன்லைன் மூலம் விண்ணப்பித்து பழகுநர் உரிமைத்தை பதிவு செய்ய வேண்டும்.
இதனைத்தொடர்ந்து ஒரு மாத காலம் பயிற்சி எடுத்து நேரடியாக சென்று வாகனத்தை ஓட்டி காட்டி, தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
RTO அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்ட நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
புதிய அறிவிப்பு
இனி ஓட்டுநர் உரிமத்தை விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை ஓட்டி காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும்.
தொலைபேசி எண், முகவரி தவறாக இருந்தால் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கே ஓட்டுநர் உரிமம் திரும்ப வந்துவிடும். அதேபோல, எக்காரணம் கொண்டும் நேரடியாக ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.