மார்ச் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலைகளை அறிவிக்கவிருக்கும் ஐக்கிய அரபு அமீரகம்

சர்வதேச எரிபொருள் விலைகளை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு மார்ச் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை வியாழன் அன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில்
உலகளவில், எண்ணெய் விலை, விநியோகத்தில் கட்டுப்பாடுகள் காரணமாக, முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், பிப்ரவரி 2024ல் சராசரியாக 3.34 சதவீதம் அல்லது ஒரு பீப்பாய்க்கு 2.6 அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பிப்ரவரியில் பெரும்பாலான நாட்களில் ஒரு பீப்பாய் 80 டொலருக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது, இது முந்தைய மாதத்தை விட சற்று அதிகமாகும்.

உலகளாவிய எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சிறிதளவு உயர்வு என்பது உள்ளூர் விலையில் பிரதிபலிக்கும் என்றே கூறப்படுகிறது. புதன்கிழமை, WTI கச்சா எண்ணெய் விலையில் 0.48 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 78.49 டொலராக வர்த்தகமாகியுள்ளது.

கட்டணத்தை மாற்றி அமைத்துக்கொள்கின்றனர்
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.43 சதவீதம் சரிவடைந்து ஒரு பீப்பாய் 83.29 டொலருக்கு விற்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை சற்று உயர்ந்தே காணப்பட்டது.

சூப்பர் 98, ஸ்பெஷல் 95 மற்றும் இ-பிளஸ் 91 ஆகியவை முறையே லிட்டருக்கு 2.88 திர்ஹாம், 2.76 திர்ஹாம் மற்றும் 2.69 திர்ஹாம் என விற்பனையாகியுள்ளது. பெரும்பாலும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், பெட்ரோல் விலை அறிவிப்புகளை எதிர்பார்த்து, அதற்கேற்ப தங்களது மாதாந்திர பட்ஜெட்டை மாற்றிக் கொள்கின்றனர்.

மட்டுமின்றி, பெட்ரோல் விலை அறிவிக்கப்பட்டதையடுத்து, உள்ளூர் டாக்ஸி ஆபரேட்டர்கள் தங்களது கட்டணத்தை மாற்றி அமைத்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *