“நான் மதுபோதையில் காரை இயக்கவில்லை” உண்மையை உடைத்த மதுமிதா
சீரியல் நடிகை மதுமிதா தனது இன்டாகிராம் பக்கதித்தில் சமீபத்தில் நடந்த விபத்து பற்றி பரவிவந்த செய்தி குறித்து பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மதுமிதா
எதிர்நீச்சல் தெடர்ச்சியில் கதாநாயகியாக நடித்து வரும் மதுமிதா பற்றி ஒரு பொய்யான தகவல் வெளியாகி இருந்தது.
இந்த தகவலின்படி காவலர் ஒருவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மதுமிதா மதுபோதையில் மோதியதாகவும் காவலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அது பொய்யான தகவல் எனவும் நடந்த உண்மையான விஷயங்கள் பற்றியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை மதுமிதா வெளியிட்டுள்ளார்.
அவர் கூறும் போது ‘நான் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கவில்லை நான் எனது ஆண் நண்பருடன் கோவிலுக்குச் சென்று திரும்பும் போது ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது உண்மை தான் .
ஆனால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை நானும் நலமுடன் உள்ளேன் காவலரும் நலமுடன் உள்ளார். அந்த காவலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக கூறிவந்த செய்திகள் எல்லாம் பொய்யானது.
இதுபோன்ற பொய்யான தகவல்களையும் வீடியோக்களையும் பார்த்து நம்ப வேண்டாம் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றில் மூலம் கூறியுள்ளார்.