குட் நியூஸ்..! இனி RTO ஆபீஸ் போகாமல் ஓட்டுநர் உரிமம் ஈஸியா வாங்கலாம்..!
ஒவ்வொரு வாகன உரிமையாளர்களும், டிரைவிங் லைசென்ஸை, கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. காரணம், ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சியே இதுஒன்றுதான்.. அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட வண்டி ஓனருக்கு, போக்குவரத்து சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் இது ஒன்றுதான்.
டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டுமானால், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் என்று சொல்லலப்படும் ஆர்டிஓ ஆபீசுக்கு சென்று வாங்க வேண்டும். ஆனால், இனிமேல் டிரைவிங் லைசென்ஸ், விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு வரப்போகிறதாம். அதுவும் தபாலில் அனுப்பும் வசதி நடைமுறைக்கும் வந்துள்ளது.
வழக்கமாக ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமென்றால் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எல்.எல்.ஆர். பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை இயக்கி காட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து போட்டோ எடுத்துக் கொண்ட பின் நேரில் சென்று ஓட்டுநர் உரிமம் பெற்று கொள்ள வேண்டும்.ஆனால் தற்போது ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு தபாலில் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதாவது வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை இயக்கிக்காட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்படும்.
அதேபோல் ஆர்.சி.புத்தகத்தையும் பதிவுத் தபால் மூலமாகவே பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான ஓட்டுனர் உரிம கட்டணமான ரூ.520 உடன், தபால் செலவுக்காக ரூ.50 கட்டணம் மட்டுமே இதற்கு செலுத்தினால் போதும். ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உரிமம், பதிவுச்சான்றிதழும் (ஆர்சி புக்) தபால் மூலமே உங்களுக்கு கிடைத்துவிடும்.ஒருவேளை விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முகவரி தவறாக இருந்தாலோ, அல்லது விண்ணப்பதாரர் வீட்டில் இல்லையென்றாலோ, ஆர்டிஓ ஆபீசுக்கே அந்த டிரைவிங் லைசென்ஸ் திரும்பி வந்துவிடும்..