குட் நியூஸ்..! இனி வெறும் 100 ரூபாயில் புற்றுநோய்க்கு சிகிச்சை : டாடா நிறுவனம் கண்டுபிடிப்பு..!

சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

இந்நிலையில், மாத்திரை மூலம் புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி கண்டதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் நிறுவனம், 2ஆவது முறையாக புற்றுநோய் வருவதை இந்த100 ரூபாய் மாத்திரை தடுக்கும் எனக் கூறியுள்ளது.

அதாவது முதல் முறை கேன்சர் பாதிப்பை எதிர்கொண்ட ஒருவருக்கு மீண்டும் கேன்சர் வர வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் முதல் முறை கேன்சர் பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு 2வது முறை கேன்சர் வருவதைத் தடுக்கும் மருத்தை மாத்திரை வடிவில் டாடா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது.டாடா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ள இந்த மாத்திரை, நோயாளிகளுக்குப் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுப்பதோடு, கதிர்வீச்சுச் சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை போன்ற சிகிச்சைகளின் பக்கவிளைவுகளை 50 சதவீதம் வரை குறைக்கும் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக புற்றுநோய்க்கு லட்சக்கணக்கில் செலவு செய்யும் சூழல் இருந்த நிலையில், டாடா நிறுவனத்தின் கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *