இது தெரியுமா ? உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் “குடம்புளி பானம்”..!
பல டயட்டையும் பின் தொடர்ந்தாலும் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் உடல் எடை குறையாமல் கூடி கொண்டு செல்கிறது என்று சொல்பவர்களே அதிகம். சரியான திட்டமிட்ட உணவு முறை, உடல் உழைப்பு என்பவற்றோடு இப்போது குறிப்பிடப்படும் பானம் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. இவை ஒன்று உடல் எடை குறைப்பில் சிறப்பாக உதவுகிறது. அதுதான் குடம்புளி பானம் ஆகும்.
தேவையான பொருட்கள்:
குடம்புளி – நான்கு துண்டுகள். (இது மருத்துவ குணம் நிறைந்த ஒருவகை புளி).
இடித்த பூண்டு – அரை தேக்கரண்டி,
பச்சை மிளகாய் – ஒன்று,
தண்ணீர் – ஒரு கப்,
தேங்காய் பால் – அரை கப்,
புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
ஐஸ்துண்டுகள் – தேவைக்கு.
செய்முறை :
புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
லேசான சுடுநீரில் புளியை மூன்று மணிநேரம் ஊறவைத்துவிட்டு, பின்பு அதனை அப்படியே நீரோடு மிக்சியில் கொட்டி அத்தோடு பூண்டு, மிளகாய் சேர்த்து ஜூஸ் ஆக்குங்கள்.
அதை வடிகட்டி எடுத்து தேங்காய் பாலுடன் கலந்திடுங்கள்.
லேசாக உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதில் ஐஸ்துண்டுகள், புதினா, கொத்தமல்லித்தழை கலந்து பருகுங்கள்.
இந்த பானத்தில் ஹைட்ரோ குளோரிக்கும், ஆன்டி ஆக்சிடென்ட்டும் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும். அசிடிட்டி அகலும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிகம் பசி எடுக்காது. உடல் எடை குறையும்
புளியைக் காட்டிலும் அதிக மகத்துவம் கொண்டது குடம்புளி.குடம்புளி மிதமான புளிப்புச்சுவை கொண்டது. இவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் புளியைக் காட்டிலும் அதிக மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது. இதை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தாலும் இன்று வரை கேரள மக்கள் இந்த வகை புளியைத்தான் கொண்டிருக்கிறார்கள். விளைச்சல் அதிகமில்லாத இந்த புளி மலைப்பிரதேசங்களில் அதிகம் காணப்படும்.
குடம்புளி மருத்துவ புளி என்று அழைக்கப்படுகிறது. இதில் 30% அளவு ஹைட்ராக்ஸி சிட்ரிக் ஆசிட் உள்ளது. இவை பல ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும். இதயப்பாதிப்பு நேராமல் காக்கிறது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது. அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் உணவில் அதிக புளி சேர்க்ககூடாது .
ஆனால் இந்த குடம்புளி உபாதையைஅதிகரிக்காது மாறாக செரிமானத்துக்கு உதவும். நீரிழிவு, ஆர்த்ரைட்டீஸ், வீக்கம் இருக்கும் இடங்களில் பற்று போட என பலவிதமான நோய்களுக்கு நல்ல நிவாரணம் தருகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் வயிற்றுபோக்கை குணப்படுத்த குடம்புளி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. குடம்புளி ஆயுர்வேத மருந்து.
குடம்புளியை சிறு எலுமிச்சை அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் ஊறவிடவேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேர்த்தால் இரத்தம் உறைதல் தொந்தரவு பிரச்சனை ஏற்படும் என்பதால் அளவுக்கு மீறி பயன்படுத்த வேண்டாம். மறுநாள் ஒரு டம்ளர் குடம்புளி நீருக்கு மூன்று டம்ளர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து இறக்கவும்.
ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் காலை உணவுக்கு முன் ஒரு டம்ளர் நீரை எடுத்து குடிக்க வேண்டும். மதிய உணவு மற்றும் இரவு நேர உணவுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும். தினமும் தவறாமால் மூன்று வேளையும் மூன்று டம்ளராக குடித்து வர வேண்டும். தினமும் தவறாமல் குடிக்க வேண்டும்.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க வைப்பதோடு கொழுப்புகளை உடலிலும் தங்காமல் வெளியேற்றுகிறது. உடலில் எந்த இடத்தில் கொழுப்பு இருந்தாலும் அதை வெளியேற்றும் குறிப்பாக இடுப்பு, தொடை, வயிறு, புட்டம் பகுதிகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைக்கும்.
எடை குறைப்பில் இந்த புளி சிறப்பான பலன்களை அளிக்க கூடும் என்கிறார்கள். எடை குறைப்புக்கு பயன்படுத்தப்படும் ஆய்வு ஒன்றில் இவை நிறைவான பலன்களை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடம்புளி சாறுகளை பசி குறைக்க பயன்படுத்துகிறார்கள். இந்த நீரை குடிக்கும் போதே பசி அதிகமாகும் பிரச்சனையை குறைக்கும். ஹார்மோனை சமன்படுத்துவதால் அதிகமாக பசி உணர்வு எடுக்காது.