18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு புதன் சேர்க்கை: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வ மழை
18 ஆண்டுக்கு பின் புதன்-ராகுவின் சேர்க்கை : ஜோதிட சாஸ்திரம் புத்தகத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக புதன் கிரகம் கருதப்படுகிறது. பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியும் புதன் ஆவார். அதுமட்டுமின்தி புதன் கிறக்கமானது மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் ஆவார்.
மறுபுறம் ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. தற்போது இந்த ராகு கிரகம் மீன ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். அதேசமயம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனான புதன் மீன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் மீன ராசியில் புதன் ராகு சேர்க்கை சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் அபூர்வ சேர்க்கையின் தாக்கமானது அனைத்து 12 ராசிகளிலுமே காணப்படும், எனினும் மூன்று ராசிக்காரர்கள் மட்டும் இந்த ராகு புதன் சேர்க்கையால் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். இந்நிலையில் மீன ராசியில் நிகழப் போகும் ராகு புதன் சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்பதைக் அறிந்துக்கொள்வோம்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசியின் 11வது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழவுள்ளதால், ரிஷப ராசிக்காரர்கள் லாபகரமான பலனைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள், அதனுடன் வியாபாரத்தில் லாபம் கொட்டோ கொட்டுனு கொட்டும். மேலும் இந்த லாபத்தால் ரிஷப ராசிக்காரர்களின் வங்கி இருப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிபுரியும் ரிஷப ராசியினருக்கு பதிவு உயர்வு கிடைப்பதுடன், கடின உழைப்புக்கு ஏற்ப பலனையும் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் சேமிப்பில் ஓவர் ஹைக் இருக்கும்.
கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசியின் 9வது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கையானது நிகழப் போவதால், கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும. நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்து வெற்றிகரமாக நினைத்தப் படியே முடிப்பீர்கள். அரசு வேலை இருப்பவர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும், நன்மைகளைப் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் கடக ராசி மாணவர்களின் விருபபங்கள் நிறைவேறும். வேலை தொடர்பான செய்யப்படும் பயணங்களில் நல்ல நிதி நன்மைகளை பெறுவீர்கள்.
விருச்சிகம் (Scorpio Zodiac Sign): விருச்சிக ராசியின் 5வது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கையானது நடகப் போவதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாகவும், சாதமாகவும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள், மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். காதலித்து வந்தால், அதிலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும். பொருளாதார நிலை மேம்பட்டு சிறப்பாக இருக்கும்.