வருகிறது குரு பெயர்ச்சி… அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் இவர்கள்தான்
Guru Peyarchi Palangal 2024 : ஜோதிடத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றும். இந்த கிரங்களின் ராசி மாற்றத்தில், ராசி பெயர்ச்சி, நட்சத்திர பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் என பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து கிரகங்களும் தங்கள் ராசிகளை அவ்வப்போது மாற்றினாலும் சில குறிப்பிட்ட கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.
அந்த வகையில் நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக குரு பகவான் கருதப்படுகிறார். ஏனெனில் இந்த கிரகத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான பலன்களை தரும் என்பது ஜோதிட ஐதீகம். அதுமட்டுமின்றி செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணியான குரு கிரகத்தின் பெயர்ச்சியானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். அந்த வகையில் தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணத்து வருகிறார். தற்போது மேஷ ராசியில் பெயர்ச்சி பெற்று பயணம் செய்து வரும் குரு பகவான் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி அன்று மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசிக்கு (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியாக இருக்கும். ஆனால் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி லாபகரமான நற்பலன்களை அளிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் அனைத்து விதமான அதிர்ஷ்டத்தை அபாரமாக பெறுவார்கள். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் (Aries Zodiac Sign): குருபகவான் மே 1 ஆம் தேதி தனது ஜென்ம ராசியில் இருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு குடியேறப் போவது, மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலனை தரும். தொழிலில் பணவரவு ஏற்பட்டு மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் அளவில்லா இன்பத்தை பெறுவீர்கள். வேலை சம்மந்தமாக செய்யப்படும் பயணங்கல் மூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள். மரியாதை அதிகரிக்கும். வருமானத்தில் அதிகரிப்பை காண்பீர்கள். கடன் தொல்லை படிப்படியாக நீங்கும். பதவி உயர்வுடன், சம்பள உயர்வை பெறுவீர்கள். புதிய தொழிளை தொடங்க மே மாதத்திற்கு பிறகு சாதகமாக இருக்கும். தாம்பத்திய உறவு வலுவாக இருக்கும். திருமணம் கைகூடும்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): குரு பகவானால் வரும் மே மாதம் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால், உங்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். புதிதாக வீடு அல்லது வாகனத்தை வாங்கலாம். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். இந்த ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்தியைப் பெறுவார்கள். கூட்டுத் தொழிலில் வெற்றி கிடைப்பதுடன், லாபத்தையும் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள்.
மிதுனம் (Gemini Zodiac Sign): குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும். மேலும் இந்த பெயரக்கியால், உங்களது ராசியில் விபரீத ராஜயோகம் உருவாகப் போகிறது. எனவே மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணம் வரவு இருக்கும். புதிதாக வீடு அல்லது வாகனத்தை வாங்கலாம். கடன் தொல்லை நீங்கும். தாம்பத்திய வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.
கடகம் (Cancer Zodiac Sign): குருபகவானின் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் சாதகமாகமான பலனை பெறுவார்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் ஒருவழியாக முடிவுக்கு வரும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் பெருகும். முதலீடுகள் மூலம் லாபத்தை பெறலாம்.