ஆண்கள் யோகாசனம் செய்யலாமா? அப்படி செய்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்?

Yoga Asanas Health Benefits For Men: யோகாசனங்கள் செய்வதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. உடலை ஃப்ளெக்ஸிபில் ஆக வைத்துக்கொள்வதற்கும், கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கும், யோகாசனங்கள் உதவுகிறது.

ஆண்கள் யோகாசனங்கள் செய்யலாமா?

ஆண்கள், தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மில் சேர்ந்துகொண்டு, ஸ்ட்ரிக்ட் ஆன டயட்டை மேற்கொள்வர். ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு யோகாசனங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது தோன்றாமலேயே இருக்கும். யோகாசனம், தொன்றுதொட்டு பல ஆண்டு காலங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. யோகாசனங்களை ஆண்கள் செய்வதை விட, பெண்கள்தான் அதிகமாக செய்கின்றனர். ஆண்கள் யோகாசனங்கள் செய்வதால், பல நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?

ஆண்களுக்கு யோகாசனங்கள் நல்லதா?

யோக ஆசனங்கள் என்பது நல்ல சுவாச பயிற்சியாக பார்க்கப்படுகிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கவும் யோகா உதவுகிறது. விளையாட்டு வீரர்கள், செலிப்ரிட்டிகள், ஃபிட்னஸ் உடற்பயிற்சியாளர்கள் என பலர், யோகாசன பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அதனால், யோகாசனங்கள் செய்வது ஆண்களுக்கு நன்மை பயக்கும் என மருத்துவர்களும், உடற்பயிற்சி ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது:

யோகா ஆசனங்கள் செய்வதால், தசைகள் கடினமாக ஆகாமல் இருப்பதை தவிர்க்க முடியும். உள்ளிருக்கும் எலும்புகளை வலுப்படுத்துவதால், உடல் நெகிழ்வான தோற்றம் அடைகிறது. இதனால் முதுகு வலி, நாள்பட்ட வலி, எலும்பில் ஏற்படும் வலியையும் இது சரி செய்கிறது.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது:

யோகா செய்வதால், உடலில் ஆக்சிஜன் பரிமாற்றம் முழுவதுமாக செல்வதற்கு உதவுகிறது. இதனால், உடலில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. உடலை ட்விஸ்ட் செய்து செய்யும் ஆசனங்களினால், இந்த ரத்த ஓட்டத்தை மேலும் அதிகரிக்கலாம்.

இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

2012ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தொடர்ந்து யோகா செய்பவர்களுக்கு இருதய நோய் குறைபாடுகள் குறைவாக ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகா செய்வதனால், இதய துடிப்பு சீரான வேகத்தில் துடிப்பதோடு மட்டுமன்றி, மூச்சு பயிற்சியும் சீராக நடைபெறுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற மன ஆரோக்கியத்தை கெடுக்கும் பிரச்சனைகள் இன்று தனிநபர்களிடையே மிகவும் பொதுவானவையாக இருக்கின்றன. இந்த பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், மக்கள் தங்கள் மனநலத் தேவைகளைப் சரி செய்து கொள்ள விரும்புகின்றனர். மன அழுத்தத்தை கையாள்வதற்கு, யோகா சிறந்த கருவியாக பார்க்கப்படுகிறது.

மனதை சாந்தப்படுத்த உதவுகிறது:

அமைதியான மனதை பெறுவதற்கு, யோகா ஆசனங்கள் உதவுகிறது. உள்ளூர இருக்கும் சிந்தனைகள், மற்றும் உங்களை பற்றிய புரிதலை நீங்களே உருவாக்கி கொள்ள, யோகா உதவுகிறது. பயம், மனதை ஆக்கிரமிக்கும் தவறான எண்ணங்கள் ஆகியவற்றை போக்குவதற்கும் யோகாசனம் உதவுகிறது.

பிற நன்மைகள்:

>முதுகு வலியை சரிசெய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
>உடலில் க்ளூகோஸ் அளவு அதிகரிக்க உதவலாம்.
>பாலியல் வாழ்க்கைக்கு உதவுகிறது
>நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *