ரூ.1 லட்சம் கூட தேவையில்லை.. குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க சூப்பர் சான்ஸ்..

மின்சார ஸ்கூட்டர்கள் வாங்குபவர்கள்,1 லட்சத்திற்கும் கீழ் வரும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றியும், அவற்றின் விலை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Cheapest Electric Scooters

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும். முழு சார்ஜில் 95 கிலோமீட்டர் வரம்பை வழங்குகிறது. 3kWh மாடல் 143 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.79,999 முதல் தொடங்கும்.

Electric Scooters

ஒகினாவா நிறுவனத்திடமிருந்து ப்ரைஸ் ப்ரோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 81 கிலோமீட்டர்கள் வரை செல்லும். 56 கிமீ வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.99,645 (எக்ஸ்-ஷோரூம்).

Acer MUVI 125

ஏசர் நிறுவனமும் மின்சார வாகனப் பிரிவில் நுழைந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.99,999. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் வரை செல்லும்.

Electric Luna

கைனெடிக் கிரீன் லூனா எலக்ட்ரிக் மொபெட்டின் விலை ரூ.69,990. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த மொபெட்டின் பேட்டரி 110 கிலோமீட்டர் வரை நீடிக்கும். அதாவது லூனாவை இத்தனை கிலோமீட்டர் வரை ஓட்ட முடியும். இதற்கு சுமார் 15 ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kinetic Zing

கைனெடிக் கிரீன், லூனாவை புதிய தோற்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக் ரூ.71,990க்கு கிடைக்கிறது. இந்த இ-பைக் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிலோமீட்டர் வரை பயணிக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *