ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி கார் வரப்போகுது! ஹூண்டாய், மாருதி தாக்குப் பிடிக்குமா?

செக் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பாளரான ஸ்கோடா, இந்திய சந்தையில் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவியை அறிமுகம் செய்யத் தயாராக உள்ளது. ஏற்கெனவே இந்தப் பிரிவில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ போன்ற கார்களுக்கு ஸ்கோடாவின் புதிய கார் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

வரவிருக்கும் ஸ்கோடாவின் புதிய கார் சிறிய ரக எஸ்யூவி காராக இருக்கும். இந்தக் கார் ஸ்கோடாவின் பிரபலமான குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களைப் போல MQB-A0-IN இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த எஸ்யூவி காரும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

இந்தியாவில் வளர்ந்து வரும் எஸ்யூவி கார்களுக்கான சந்தையைப் பயன்படுத்திக்கொள்ளுதல் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தைப் பங்கை அதிகரிப்போது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தற்போது, வரவிருக்கும் எஸ்யூவி பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. ஆனால் இந்தியாவில் கிடைக்கும் குஷாக் மற்றும் கோடியாக் போன்றே, வாகனத்தின் பெயர் ‘கே’ என்ற எழுத்தில் தொடங்கி க்யூவில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது. கைலாக், கரிக், கைமாக், கைரோக் மற்றும் க்விக் என ஐந்து பெயர்களைப் பரிசீலித்து வருகிறது.

மார்ச் 2024 இல் வெளியிடப்படும் இந்த மாடல், 2025ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகச் சலுகையுடன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. வளர்ந்து வரும் பட்ஜெட் காம்பாக்ட் SUV கார்கள் பிரிவில் இந்தக் கார் இடம்பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய காரின் எஞ்சின் விருப்பங்களைப் பற்றி ஸ்கோடா எதையும் கூறவில்லை. ஆனால் இது 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர், டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த கார் குஷாக் மற்றும் ஸ்லாவியா மாடல்களில் காணப்படுவது போல் 115 hp மற்றும் 178 np டார்க்கை வழங்கக்கூடும்.

புதிய SUV பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் குறைவாக இருந்தாலும், இது சன்ரூஃப், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ADAS போன்ற நவீன அம்சங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *