நடிகை டாப்ஸிக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை உடன் திருமணம்.. போட்டோவுடன் இதோ
ஆடுகளம் படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனவர் டாப்ஸி. அவர் அதற்கு பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவருடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வருகிறார். 2013ல் இருந்து அவர்கள் காதலித்து வருவதாக பேட்டியில் கூறி இருக்கின்றனர்.
விரைவில் திருமணம்
இந்நிலையில் வரும் மார்ச் மாத இறுதியில் டாப்ஸியின் திருமணம் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது. அதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர், சினிமா துறையினருக்கு கூட அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.
திருமணம் பற்றி டாப்ஸியிடம் கேட்டதற்கு, “என் பர்சனல் வாழ்க்கை பற்றி எந்த விளக்கமும் இதுவரை கொடுத்ததில்லை, இனிமேலும் பேச மாட்டேன்” என ஒரே வரியில் பதில் அளித்து இருக்கிறார்.