51,000 பேருக்கு உணவு.. அன்னதானத்துடன் தொடங்கிய ஆனந்த் அம்பானி – ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்வு..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் – ஷைலா மெர்ச்சன்ட்டின் இளைய மகள் ராதிகா மெர்ச்சண்ட்க்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இவர்களின் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் மார்ச் 1 முதல் 3 வரை குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கும் 1,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பில் கேட்ஸ், மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட பல சர்வதேச பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் டவுன்ஷிப் அருகே உள்ள ஜோக்வாட் கிராமத்தில் ‘அன்னதான சேவையுடன் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, கிராமத்தைச் சேர்ந்த சுமார் 51,0000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அம்பானியின் குடும்ப பாரம்பரியத்தின் படி, இந்த அன்னதான சேவை தொடங்கியது. , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கிராம மக்களுக்கு குஜராத்தி உணவை வழங்கினர். அடுத்த சில நாட்களுக்கு இந்த அன்னதான சேவை தொடரும் என்று கூறப்படுகிறது.
ராதிகாவின் தாய்வழி பாட்டி, அவரின் தந்தை விரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரும் அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ‘பிறகு, பாடகர் கிர்திதன் காத்வியின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பங்கேற்பாளர்கள் அழைக்கப்பட்டனர்.
ஆனந்த் மற்றும் ராதிகா திருமணத்திற்கு முந்தைய விழாக்களின் ஒரு பகுதியாக ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் மூன்று நாட்களுக்கு சுமார் 1,000 விருந்தினர்களுக்கு விருந்தளிக்கப்பட உள்ளது.
முன்னதாக பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆனந்த் அம்பானி, திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஜாம்நகர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று விளக்கம்ளித்தார்.. அப்போது பேசிய அவர் தனது பாட்டியின் பிறந்த இடம் என்பதால் ஜாம்நகரைத் தேர்ந்தெடுத்ததாகவும், தனது தாத்தா திருபாய் அம்பானி மற்றும் தந்தை முகேஷ் அம்பானி ஆகியோர் தங்கள் வணிகத்தைத் தொடங்கிய நகரத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார்.
கடந்த ஆண்டு ஜனவரி 19 அன்று மும்பையில் நடந்த கோல் தான விழாவில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் நிச்சாயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.