FASTag Deadline : ஃபாஸ்ட்டேக் KYC பதிவு செய்ய இன்றே கடைசி நாள்… பண்ணலைனா என்னாகும் தெரியுமா?

சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்ட் டேக்கில், KYC விவரங்களை பதிவு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

சுங்கக்கட்டணத்தை நெறிப்படுத்துவதற்காக, ஒரே வாகனம், ஒரே ஃபாஸ்ட் டேக் என்ற திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், ஒரே ஃபாஸ்ட் டேக்கை பல வாகனங்களுக்கு பயன்படுத்துவது, ஒரே வாகனத்திற்கு பல ஃபாஸ்ட் டேக்கை பயன்படுத்துவது தவிர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபாஸ்ட் டேக் கணக்குகளில், KYC எனப்படும் வாடிக்கையாளர்களின் தகவல்களை பதிவு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. எனவே இன்றைக்குள் கே.ஒய்.சி விவரங்களைப் பதிவு செய்யாதவர்களின் ஃபாஸ்ட் டேக் கணக்குகள் விரைவில் செயலிழக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அப்டேட் செய்வது எப்படி?

வங்கியுடன் இணைக்கப்பட்ட FASTag இணையதளத்தைப் பார்வையிடவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும். “எனது சுயவிவரம்” என்ற பகுதிக்குச் சென்று KYC தகவலைக் கிளிக் செய்யவும். முகவரிச் சான்று மற்றும் மற்ற விவரங்கள் உள்ளிட்ட தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு அப்டேட் கொடுக்கவும். அந்த பகுதியில் நீங்கள் அப்டேட் செய்த KYC காட்டப்படும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *