இப்படி பண்ணா தட்கல் டிக்கெட் ஈசியா கிடைக்கும்..! பலருக்கும் தெரியாத ட்ரிக்ஸ்
கடைசி நிமிடத்தில் பயணத்தை முடிவு செய்து பயணம் மேற்கொள்ளும் நபர்கள் கன்ஃபார்ம்டு ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு IRCTC’s தட்கல் திட்டம் மிகவும் உதவிகரமானதாக இருக்கிறது. IRCTC வழங்கும் தட்கல் திட்டம் மூலமாக பயணத்திற்கு ஒரு நாள் முன்பு ரயில் டிக்கெட்களை பயணிகள் புக்கிங் செய்து கொள்ளலாம். இது உடனடி அல்லது அவசரகால பயண தேவைகளை பூர்த்தி செய்கிறது. எனினும் அதிக அளவு டிமாண்ட் மற்றும் குறைவான டிக்கெட் காரணமாக தட்கல் மூலமாக ஒரு டிக்கெட்டை புக்கிங் செய்வது என்பது சவாலான காரியமாக அமைகிறது. ஆன்லைனில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு நீங்கள் பின்வரும் படிகளை பின்பற்றலாம்:
IRCTC வெப்சைட் பயன்படுத்தி:
IRCTC வெப்சைட்டிற்கு சென்று அதில் லாகின் செய்யவும். அக்கவுண்ட் இல்லாதவர்கள் புதிய அக்கவுண்டிற்கு சைன் அப் செய்யுங்கள்.
“Book Ticket” ஆப்ஷனை தேர்வு செய்து, “Tatkal” புக்கிங் என்பதை கிளிக் செய்யவும்.
எங்கிருந்து எங்கு பயணிக்க விரும்புகிறீர்கள், பயண தேதி, ரயில் மற்றும் வகுப்பு போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்.
பயணியின் விவரங்கள் மற்றும் பெர்த் விருப்பம் போன்றவற்றை என்டர் செய்யவும்.
ரயில் கட்டணத்தை ஒரு முறை பார்வையிட்டு பேமெண்ட் செலுத்தவும்.
ஒரு பேமெண்ட் ஆப்ஷனை தேர்வு செய்து, புக்கிங்கை உறுதி செய்யுங்கள்.
பேமெண்ட் வெற்றிகரமாக செய்யப்பட்டதும் இ-டிக்கெட்டை டவுன்லோட் செய்யவும்.
IRCTC அப்ளிகேஷன் பயன்படுத்தி:
உங்களுடைய ஸ்மார்ட்போனில் IRCTC அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
உங்களுடைய அக்கவுண்டில் லாகின் செய்தவுடன் “Tatkal Booking” என்பதை தேர்வு செய்யவும்.
நீங்கள் பயணிக்க விரும்பும் ரயில் தேதி மற்றும் பயணி விவரங்களை நிரப்பவும்.
இருக்கை வகுப்பு மற்றும் பெர்த் வகையை தேர்வு செய்யவும்.
ரயில் டிக்கெட்டிற்கான பேமெண்ட் செலுத்தவும்.
விருப்பமான பேமெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி பேமெண்டை நிறைவு செய்யவும்.
பேமெண்ட் உறுதியான பிறகு டிக்கெட்டை டவுன்லோட் செய்யுங்கள்.
உங்களது தட்கல் டிக்கெட் உறுதி ஆவதற்கு ஒரு சில டிப்ஸ் :
நீங்கள் பயணிப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பாவது டிக்கெட்டை புக் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் உங்களது டிக்கெட் கன்ஃபார்ம் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
வாய்ப்பு இருந்தால் பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் டிக்கெட்டுகளை புக் செய்யுங்கள். இது ப்ராசஸிங் செயல்முறையை விரைவாக்கும்.
புக்கிங் செயல்முறையை விரைவுப்படுத்த முன்கூட்டியே தேவையான அனைத்து விவரங்களையும் தயார் நிலையில் வைக்கவும்.
தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முன்பு உங்களது சாதனத்திற்கு நிலையான மற்றும் விரைவான இன்டர்நெட் கனெக்சன் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
குறைவாக பிரபலமுள்ள ரயில்களை தேர்வு செய்வதால் உங்களது டிக்கெட் கன்ஃபார்ம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
வார இறுதி நாட்களை காட்டிலும் பிற நாட்களை தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
எதிர்கால புக்கிங்கிற்கு மாஸ்டர் பட்டியலை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். மாஸ்டர் லிஸ்ட் என்பது விருப்பமான இருக்கை மற்றும் உணவு போன்றவற்றுடன் இருக்கக்கூடிய பயணிகளின் பட்டியல்.
இந்த படிகள் மற்றும் குறிப்புகளை பின்பற்றி தட்கல் புக்கிங் செய்து கடைசி நிமிடத்தில் கூட கன்ஃபார்ம்டு இரயில் டிக்கெட் மூலமாக உங்களது பயணத்தை அனுபவியுங்கள்.