சிஎஸ்கே பயிற்சி முகாமுக்கு வர வாய்ப்பே இல்லை.. நிர்வாகிகளுக்கு ஷாக் கொடுத்த நட்சத்திர வீரர்!
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ள அனைத்து வீரர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி முகாமில், முஷ்டாஃபிகுர் ரஹ்மான் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.
டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி தரப்பில் நியூசிலாந்து அணியின் டேரல் மிட்சல், ரச்சின் ரவீந்திரா ஆகியோரை வாங்கப்பட்டனர். அதேபோல் சிஎஸ்கேவின் சிங்கமான ஷர்துல் தாக்கூர், இளம் வீரரான சமீர் ரிஸ்வி, முஷ்டாஃபிகுர் ரஹ்மான், அவினாஷ் ராவ் உள்ளிட்டோர் வாங்கப்பட்டனர். மொத்தமாக ரூ.31.4 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்ற சிஎஸ்கே அணி ரூ.30.4 கோடி செலவு செய்து சிறப்பான வீரர்களை சென்னை அணி வாங்கியுள்ளது.
சிஎஸ்கே அணி நிர்வாகம் மட்டுமல்லாமல் ரசிகர்களும் நிறைவாக உள்ளனர். இந்த நிலையில் 17வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணியை எதிர்த்து நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது. கடைசி முறையாக தோனி சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கவுள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த வாரம் தொடங்கவுள்ளது. இதற்கான பணிகளை சிஎஸ்கே நிர்வாகிகள் தயார் செய்து வருகின்றனர். காயமடைந்த வீரர்களின் உடல்நிலை குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டுள்ள முஷ்டாஃபிகுர் ரஹ்மான் பயிற்சி முகாமில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஏனென்றால் இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி விளையாடவுள்ளது. இது மார்ச் 4ல் தொடங்கி மார்ச் 18 வரை நடக்கவுள்ளது. ஐபிஎல் தொடருக்கு 4 நாட்கள் முன்பு வரை வங்கதேச அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளதால், முஷ்டாஃபிகுர் ரஹ்மான் சிஎஸ்கே பயிற்சி முகாமில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு மே 13ஆம் தேதி வரை மட்டும் என்ஓசி வழங்கியுள்ளது. இதனால் முஷ்டாஃபிகுர் ரஹ்மானை வைத்து சிஎஸ்கே எந்த திட்டங்களையும் செய்யாது என்றே பார்க்கப்படுகிறது.