முதன்முறையாக மைனஸ் 25°C குளிரில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்!

மைனஸ் 25 டிகிரி செல்ஸியஸ் குளிரில் காதலர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மைனஸ் 25°C குளிரில் திருமணம்
இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த காதலர்கள், ஹிமாச்சல பிரதேசத்தின் கடும் குளிரான பள்ளத்தாக்கில் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்கள் மைனஸ் 25 டிகிரி செல்ஸியஸ் கடும் குளிரில் அலங்கார மணமேடை அமைத்து இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

இவர்கள் திருமணம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஹிமாச்சல பிரதேசத்தின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அஜய் பன்யால் என்பவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

திருமண வீடியோ
மேலும் அவர், ” இதுபோன்ற திருமணமும் நடைபெறும். காதலர்களின் ஆசை நிறைவேறிய தருணம் இது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காதலர்கள் ஸ்பிதி பள்ளத்தாக்கில் மைனஸ் 25 டிகிரி செல்ஸியஸ் குளிரில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த மாதிரியான திருமணங்கள் நடப்பது இதுவே முதல்முறை. நெடுந்தூரம் பயணம் செய்த்து தனித்துவமாக திருமணம் செய்பவர்களுக்கு ஏற்ற இடமாக ஸ்பிதி மாறிவருகிறது” என்றார்.

https://www.instagram.com/p/C34r2G9RDax/?utm_source=ig_web_copy_link

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *