Sani Luck: சனி சுக்கிர சேர்க்கை..2024ல் ராஜ யோகம்
நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு சுக்கிரனும் சனி பகவானோடு சேர உள்ளார்.
சனி மற்றும் சுக்கிரன் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
சனி மற்றும் சுக்கிர சேர்க்கை உங்களுக்கு மங்களகரமாக அமைய உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். இரு மடங்கு லாபம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷ ராசி
இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. சனி மற்றும் சுக்கிரன் உங்களுக்கு வருமானத்தை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றனர். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செழிப்பாக இருக்கும்.
மகர ராசி
சனி சுக்கிர சேர்க்கை உங்களுக்கு லாபமாக அமையப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய உறவுகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.