இளவரசர் வில்லியம் திடீரென நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்ததால் எழுந்த சந்தேகம்: அரண்மனை விளக்கம்
பிரித்தானிய இளவரசர் வில்லியம் தான் கலந்துகொள்ள இருந்த முக்கிய நிகழ்ச்சி ஒன்றை திடீரென ரத்து செய்ததால், மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அரண்மனை வட்டாரம் அது தொடர்பில் விளக்கமளித்துள்ளது.
பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்த வில்லியம்
இளவரசர் வில்லியம், மறைந்த கிரீஸ் நாட்டு மன்னரான King Constantine என்பவரது நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், திடீரென அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளார். அவருக்கு பதிலாக, மன்னர் சார்லசின் சகோதரியான இளவரசி ஆன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.
எழுந்துள்ள சந்தேகம்
இப்படி திடீரென இளவரசர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததால், ஒருவேளை இளவரசி கேட்டுக்கு ஏதாவது நிகழ்ந்துவிட்டதோ என சந்தேகம் எழுந்தது.
அத்துடன், சமீபத்தில் வில்லியமுடைய நண்பரான Thomas Kingston திடீரென உயிரிழந்தார். அவர், இளவரசர் மைக்கேலின் மருமகனாவார். ஆக, தன் நண்பர் திடீரென மரணமடைந்ததால் கிரீஸ் மன்னரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை வில்லியம் தவிர்த்துவிட்டாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆனால், கிரீஸ் மன்னரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை வில்லியம் தவிர்க்க இந்த இரண்டு விடயங்களுமே காரணம் இல்லை என தெரிவித்துள்ள பக்கிங்காம் அரண்மனை வட்டாரம், இளவரசி கேட்டுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும், அவரது உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருவதாகவும், அவர் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.