Relief: ‘மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 100%நிவாரண உதவிகள்’ – முதலமைச்சர் வலியுறுத்தியதை பகிர்ந்த அமைச்சர் உதயநிதி

சென்னை தலைமைச் செயலகத்தில் மழை வெள்ளம் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி, அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தினார் எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘’அதிகனமழையாலும் – வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி – தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர்கள் – தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நம் முதலமைச்சர் அவர்கள், அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்கள்” எனத் தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *